பக்கம்:தெப்போ-76.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 தெப்பேர் -76 ஒரு சதுர அடி நிலம் இருபதாயிரம் டாலர்’ என்ருர் ஜப்பான் சாஸ்திரி. . , யார் சொன்னது? உங்க மருமான் சொன்னுரா? ? என்று கேட்டார் அம்மாஞ்சி. ... - . சாம்பசிவ சாஸ்திரி ஆகாசத்தையே பார்த்துக் கொண்டு நடந்தார். மேலே என்ன பார்க்கிறீங்க? தேர் ஆகாசத்திலா ஒடப் போகுது?’ என்று சுேட்டார் அம்மாஞ்சி. தேர் போகிறபோது மேலே எதுவும் இடையூறு இருக்கக் கூடாதல்லவா? அப்படி ஏதாவது இருக்கிறதா என்றுதான் பார்க்கிறேன். நல்ல வேளே. குறுக்கே ஒரு ஒயர் கூட இல்லே’’ என்ருர் சாம்பசிவம். - - அது மட்டுமா? இரண்டு பக்கமும் பத்து மாடிக் கட்டடங்கள். கட்டடத்தின் மீதெல்லாம் ஜனங்கள் உட் கார்ந்து வேடிக்கை பார்க்க ரொம்ப வசதியான இடம்?? என்ருர் ஜப்பான் சாஸ்திரி. திடீரென்று' சாம்பசிவ சாஸ்திரிகளைக் காணவில்லே. பின்னேடு தானே வந்து கொண்டிருந்தார்...' என்று இழுத்தார் ஜப்பான் சாஸ்திரி. எங்கே போயிருப்பார்??? என்று கவலையோடு கேட் டார் அம்மாஞ்சி. வழியிலே யாராவது கெய்ஷர் அழகியைப் பார்த்து -விட்டு இளித்துக்கொண்டு நிற்கிருரோ, என்னவோ? : என்ருர் ஜப்பான் சாஸ்திரி. நீர் இங்கேயே நில்லும். நான் போய்த் தேடி அழைத் துக் கொண்டு வருகிறேன்?’ என்று சொல்லிவிட்டு வந்த வழியாகவே திரும்பி நட ந்தார் அம்மாஞ்சி வாத்தியார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/39&oldid=924691" இலிருந்து மீள்விக்கப்பட்டது