பக்கம்:தெப்போ-76.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெப்போ - 76 67° 'அப்படியா, பழம் நழுவிப் பாலில் விழுந்தது. ” என்ருர் ஜப்பான் சாஸ்திரி, - 'பால் என் றதும் ஞாபகம் வருகிறது, எனக்குக் கொஞ்சம் மில்க்கும் ப்ரூட்ஸும் வேணும். இன்று ஏகாதசி’’ என்ருர் சாம்பசிவம். எல்லோருக்கும் ஃப்ரூட் ஸ்ாலட் ஆர்டர் கொடுத்தான் ரமேஷ். "இவன்தான் உங்க மருமான? ரொம்ப லட்சணமா துருதுருப்பா இருக்கானே! எந்தப் பெண் கொடுத்து வெச்சிருக்காளோ??’ என்ருர் அம்மாஞ்சி. 'பாஷை தெரியாமல் ரொம்பக் கஷ்டப்பட்டுக் கொண் டிருந்தோம். தெய்வமே உன்னே இங்கே கொண்டுவிட் டது?’ என்ருர் ஜப்பான் சாஸ்திரி.

  • சரி, நாளேக்கு என்ன புரோக்ராம்??? என்று: கேட்டான் ரமேஷ்.
  • நாரா போகப் போகிருேம்?’ என்ருர் ஜப்பான் சாஸ்திரி.

ரொம்ப நல்லதாப் போச்சு. நானும் உங்களோடு: வந்து விடுகிறேன்’ என்ருன் ரமேஷ். மறுநாள் பொழுது விடிவதற்குள்ளாகவே பயணத்துக்குத் தயாராகிவிட்டார்கள் சாஸ்திரிகள் மூவரும. டுரிஸ்ட் பஸ் ஏழு மணிக்குள்ளாகவே நாரா போய்ச் சேர்ந்து விட். டது. டீர் பார்க் அருகில் போய் நின்ற பஸ்ஸைக் கண்ட தும் அங்கிருந்த மான்கள் கூட்டம் கூட்டமாக வேலி ஒரத் தில் வந்து நின்று கொண்டன. டுரிஸ்ட்கள் சிலர் அவற். றைப் படம் எடுத்துக் கொண்டார்கள். சிலர் அவற்றுக்கு. பிஸ்கட் மாதிரி குச்சி குச்சியாக இருந்த தின் பண்டம். ஒன்றை விலக்கு வாங்கிப் போட்டார்கள். இந்த மான்களுக்கு இந்த பிஸ்கெட்டுகளைத் தினம் தினம் சாப்பிட்டு அலுத்துப் போயிருக்காதோ??? என்ருர் அம்மாஞ்சி. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/68&oldid=924723" இலிருந்து மீள்விக்கப்பட்டது