பக்கம்:தெப்போ-76.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 தெப்போ - 76 ஏரியல் ஸர்வேயா? ஏரிகள் சர்வேயா? என்று. சிலேடையாகக் கேட்டார் அம்மாஞ்சி. அதுவும் சரிதான். ஹகோனே ஏரி என்ருல் ஒரே ஒரு ஏரி இல்லை. தொடர்ந்தாற்போல் ஐந்து ஏரிகள்’’ என்ருன் பஞ்சு. நான் விடியற்கால நாலு மணிக்கே எழுந்து ஏரி யிலே முங்கிக் குளித்து நீச்சல் அடிக்கப் போகிறேன்’’ என்ருர் சாம்பசிவம். - நாங்களும்தான்’ என்றனர் அம்மாஞ்சியும் குள்ள சாஸ்திரியும், காலையில் கேபிள் காரில் போய் உதயசூரியனப் பார்க்க வேண்டும். நீங்கள் பாட்டுக்கு நீச்சல் அடிக்கப் போயிட்டா எப்படி?’’ என்ருன் பஞ்சு. - ஐந்து மணிக்குள்ளாகவே ஸ்நானத்தை முடித்து விடுவோம். எங்களால் டிலே இருக்காது. என்ருர் அம்மாஞ்சி. +. - ஸ்நானத்துக்குப் பிறகு அம்மாஞ்சி தயாரித்துக் கொடுத்த நெஸ் பானத்தை முடித்துக் கொண்டு ஐவரும் கேபிள் காரில் ஏறிச் சென்றனர். அங்கே சூரியோதயம் பார்ப்பதற்கெனத் தனியாக ஓர் இடம் அமைத்திருந்தார் கள். அந்த இடத்தில் கைகளே ஊன்றிப் பார்ப்பதற்கு வசதியாக கனமான மரக்கட்டை வேலி ஒன்று அமைக்கப் பட்டிருந்தது. ஐவரும் அங்கே போய் நின்று கொண். டனர். எங்கே பார்த்தாலும் மல்ேகளும் மலர்கள் மண்டிய மரங்களும் தெரிந்தன. வசந்தத்தின் இதமான குளிர் காற்றும் காலே வேளையின் சுகமும் மனதுக்கு இனிமை iன்ட்டின. - ஐவரும் ஜப்பான் சமுத்திரத்தைப் பார்த்தார்கள். சூரியன் புறப்படும் போது கறுப்பு மேகங்கள் அதை மறைத்து விட்டிருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/77&oldid=924733" இலிருந்து மீள்விக்கப்பட்டது