பக்கம்:தெப்போ-76.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96. தெப்போ - 76 வகைகள் எத்தனை உண்டோ அத்தனையும் அங்கே கொண்டு வந்து வைத்திருக்கிருர்களாம். நாம் இப்போதே ஒரு காரில் போய்ப் பார்த்து விட்டு வந்து விடலாமா??? என்ருர் ஜப்பான் சாஸ்திரி.

  • பேஷாப் போச்சு! அப்படி ஒரு கார்டன் இருக்கா? அது எங்கே??’ என்று கேட்டான் பஞ் சு.
  • கியோஸு பிரிட்ஜ் அருகில் இருக்கு. அது ரொம்ப அழகான கார்டனம்’’ என்ருர் ஜப்பான் சாஸ்திரி.

இதெல்லாம் உமக்கு எப்படித் தெரிகிறது?’ என்று கேட்டான் பஞ்சு.

  • மருமான் சொல்லியிருப்பான்’ என்ருர் சாம்பசிவம்.
  • அதுதான் இல்லே. நானே டுரிஸ்ட் கய்ட் புக் ஒன்றில் பார்த்தேன். இதோ பாருங்க’’ என்று கூறி அந்த கய்ட் புக்கை எடுத்துக் காட்டினர் ஜப்பான் சாஸ்திரி.

பஞ்சு, கோபால் ராவ், சாஸ்திரிகள், ஸ்தபதிகள் எல்லோரும் உடனே கியோஸ் மி கார்டனுக்குப் புறப் பட்டுப் போய் அங்குள்ள பாறைகளில் ஒன்றைத் தேர்ந் தெடுத்தார்கள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/97&oldid=924755" இலிருந்து மீள்விக்கப்பட்டது