பக்கம்:தெப்போ-76.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 - தெப்போ - 76 டிங்க ரெண்டு பேரும் இந்தக் கொட்டுகிற மழையிலே?’’ என்று கேட்டார் கோபால் ராவ். ஷாப்பிங்?’ என்ருர் பெருமையோடு சாம்பசிவம். 'மழையில் துளிக்கூட நனேயாமல் வந்திருக்கிறீர் களே, எப்படி?’ என்று கேட்டார் கோபால் ராவ். ஜப்பான் லே மழையிலே நனேயாமல் ஷாப்பிங் பண்ணு. வதற்கு ஒரு வழி இருக்கு?’ என்ருர் ஜப்பான் சாஸ்திரி. அதென்ன வழி??’ என்று கேட்டார் கோபால் ராவ். - - அண்டர்கிரவுண்ட் வழிதான்!. அண்டர்கிரவுண்ட்லே போயிட்டால் அங்கே எல்லாக் கடைகளுமே இருக்கு. மழை யைப் பற்றிக் கவலேயே இல்லை. எவ்வளவு மழை பெய்தா லும் துளித் தண்ணிர் வராது. அது மட்டுமா? நல்ல காற்று. வறே ஜிலுஜிலுன் னு வீசும். டிராபிக் இடைஞ்சல் இல்லா ல் நிம்மதியாக நடக்கலாம். இரைச்சல், சத்தம் எதுவும் கிடையாது?’ என்ருர் ஜப்பான் சாஸ்திரி. - 'பொதுவா ஜப்பானிலேயே சத்தம் குறைச்சல் தானே !*’ என்ருர் கோபால் ராவ். - 'அண்டர்கிரவுண்ட்லே அதைவிடக் குறைச்சல் ’’ என்ருர் ஜப்பான் சாஸ்திரி. - - - --- ஜப்பானில் தரைமட்டத்துக்கு மேல் ஒரு நகரம் இருக். கிறதென்ருல் பாதாளத்தில் ஒரு நகரம் இருக்கு இட நெருக்கடி; அகலக் கால் வைக்க முடியவில்லே. ஆழக்கால் வைத்திருக்கிறர்கள். பூமிக்கடியில் குடை குடை என்று. குடைந்து தள்ளியிருக்கிறர்கள்?’ என்ருர் கோபால் ராவ்." ... ." கோபால் ராவ் சார்! ஒரு பெரிய தமாஷ் நடந்து போச்சு. அது தெரியுமா உங்களுக்கு? என்ருர் சாம்ப சிவம் சிரித்துக்கொண்டு. ன்ன அது?’ என்று ஆவலோடு விசாரித்தார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/99&oldid=924757" இலிருந்து மீள்விக்கப்பட்டது