பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72


தெய்: கோயிலுக்குச் சாமி கும்பிடப் போனேன். கூடமாட வந்த நம்ம பொன்னம்மாவும் பவளக்கொடி யும் கூத்துப் பார்க்கணும்னு ஆசைப்பட்டாங்க...... இதிலே தப்பு எதுவும் இல்லேன்னு யோசிச்சு முடிவு. செஞ்சுகிட்டு நாடகம் பார்த்தேன். (செருமுகிருள்) கந்தசாமி. உன் கட்சிப் பிரகாரம் நீ செஞ்சது. தப்பில்லேன்ன, இப்போ நான் உன்னை அடிக்கப் போற தும் குற்றமில்லை. (புளியங்குச்சியை ஓங்கி வீசுகிருன். அது சமயம் மாணிக்கம் வந்து நிற்கிருன். அடி அவன் மீது விழுகிறது) கந்தசாமி. ஆ, நீயா?-இத்தனை காலம் நீ ஆடின நாடகம் பூராவும் தோத்துப் போனது கூட எனக்கு மறந்: திட்டுதா? உனக்கு இங்கே என்ன சோவி? மாணிக்கம், ரொம்ப நல்லதனமாகச் சொல்றேன். நீ இப்பவே இங்கேயிருந்து நகண்டு போயிடு, ஆமா! இல்லேன்ன, இப்டோ பட்ட ஒரு அடியோட தப் பாது!...ம்! மாணி: செஞ்ச குத்தத்தை சுட்டிக் காட்டின அடியும் உதுை யும் பரிசு கிடைக்கிறது ஒண்ணும் அதிசயமில்லை, கந்தசாமி. எனக்கு ஒரு தங்கச்சி இருந்து, அது காரண மில்லாம அடிபடறதைக் கண்டா என் மனசு தாங்குமா? கொஞ்சம் எண்ணிப் பாருங்க! உங்க குடும்ப விவகாரத் தில் குறுக்கிடறதுக்கு எனக்கு உரிமையில்லே. ஆனாலும் என் மனசிலே பட்டதைச் சொல்லாமலும் இருக்க முடி யாது. தெய்வான மற்றவங்க மாதிரி நாடகம் பார்த்தது. தப்பில்லை என்கிறதை மட்டும் நீங்க புரிஞ்சிக்கிடுங்க. குணம் நல்லபடியா இருந்தாத்தான் பணம் மதிப்பா யிருக்கும்! -