பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 போகுது! இனிமே எனக்கு எப்பவும் சிரிப்பும் அமைதி யும்தான் உண்டாகும்; நாள் முச்சூடும் களு கண்டு கிட்டே பொழுதை ஒட்டிக்கிட்டிருப்பேன்!....அஞ்சு வய சிலே அறியாப் பருவத்திலே நான் என் தெய்வத்துக்கு கையடிச்சுக் கொடுத்த சத்தியததைக் கட்டாயம் காப் பாத்திப்புடுவேன்!. இந்த ஒரு ஆறுதல்தான் எனக்கு உயிர், உலகம் அல்லாம்!...ஆமா, தெய்வானே! இது மெய்யாலுமே சத்திய வாக்காக்கும்! ஏன்ன, நீதானே எனக்குச் சத்தியமும் சாமியும் !... (தெய்வானை விம்முகிருள்.) தெய்: மச்சான்! மாணி: அமுப்பிடாது, அத்தை மகளே!...முகூர்த்த வேளைக்குள்ளே கோவிந்தம் மா...சின்னமுத்து கண்ணு லத்தை முடிச்சு வச்சுப்பிடு! தெவ்வானை!...நீ எப்பவும் பாடுவியே தெம்மாங்குப் பாட்டு, அதைக் கடைசி வாட்டியா ஒரு தக்கம் பாடுவியா?... (தெய்வானை விக்கலுக்கும் விம்மலுக்கும் இடை யில் 'ஆத்தோரம் கொடிக்காலாம்!” என்ற தென்பாங்குப் பாடலைப் பாடுகிருள்.-பாட்டு முடிந்ததும், மாணிக்கத்தின் பாதங்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண்டு பிரி கிருள்.) -முற்றிற்று (திரை)