இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
உருவாகி வளர்ந்தபோது ஆளுங்கனம், ஆளப்படுவோர் என்ற நிலையில் தெய்வங்களும் பெருந்தெய்வங்கள், சிறு தெய்வங்கள் என்ற பிரிவுகளோடு அமைந்தன. பெருந்தெய்வக் கதைகள் எழுதப்பட்டு புராணங்கள் உருவாயின. சிறு தெய்வங்களின் கதைகள் உழைக்கும் மக்களின் நாவிலேயே பாட்டாக மலர்ந்தன. அவர்களின் நினைவிலேயே அக்கதைகள் தொடர்ந்து வந்தன. காலப்போக்கில் சில மறைந்தன. வேறு சில பெருவழிபாட்டு நெறி (cult) க்குள் கலந்து தன்வயமாக்கப்பட்டு (assimilate) மறைந்தன. 10