உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொதுவாக, பக்தி இயக்கத்தை சமஸ்கிருதமயமாக்கம் (எம்.என்.ஸ்ரீநிவாஸ்) என்ற ஒற்றைக் கருத்தாக்கத்தால் விளக்கமுயன்ற காலம் உண்டு. இன்று ஆய்வாளர்கள் அதனை ஏற்பதுகிடையாது. ஆரியம் மிக அடிப்படையாக இந்திய மயமாக்கத்திற்கு உட்பட்டது என்பதே உண்மை. இந்தியாவின் பல்வேறு வட்டாரங்களில் அந்தந்த வட்டார ஈரத்தை, வாழ்வை, வளத்தை அள்ளிக்கொண்டு வளர்ந்த பக்தி இயக்கம் சமஸ்கிருத, வைதீக வட்டத்தை வெகுவாகத் தாண்டி வெளியேறியது. பக்தி இயக்கங்கள் இந்த நாட்டின் 'ஒருமைப்பாட்டை' அல்ல. பன்முகத்தன்மையைத்தான் காட்டுகின்றன. பக்தி இயக்க காலத்தின் புராணங்களும் வழிபாட்டுமுறைகளும் இந்தியாவின் பல்வேறு வட்டாரங்களின் நாட்டார் கதைகளையும் வழக்காறுகளையும் அடித்தளமாகக் கொண்டவை. வேத, புராணங்கள் இந்த நாட்டில் வேர் கொள்ளவே இல்லை. இந்திரன், மாருதி, அக்னி, அஸ்வினி போன்ற வேத ஆரியரின் சொந்தக் கடவுளருக்கே இந்த நாட்டில் வெகுசனப் புராணங்கள் கிடையாதே! முப்பெரும் கடவுளர் என்ற வரிசையில் ஒட்டிக்கொண்ட வேதமுதல்வன் பிரம்மனுக்கு இந்த நாட்டில் உருப்படியாக ஒரு கதை கிடையாதே! தமது சொந்தக் கடவுளரைத் தொலைத்துவிட்டு விஷ்ணு கதைகளுக்குள்ளும் சிவபுராணங்களுக்குள்ளும் தனக்கு ஓரிடத்தைச் சம்பாதித்துக் கொண்டதுதான் இந்த நாட்டின் பிராமணியம். மாக்ஸ்முல்லர் வேதகால ஆரியர்களின் கடவுள் நம்பிக்கைக்கு 'ஹீனோதீயிசம்' (Henotheism) என்று ஒரு பெயர் கொடுத்தார். அதாவது, வேதகால ஆரியர்கள் பல கடவுளரை வணங்கினார்கள். ஆயின், எந்தக் கடவுளை, குறிப்பிட்ட ஒரு பாடலில் மையப்படுத்துகிறார்களோ அந்தக் கடவுளை அந்தப் பாடலின்போது மட்டும், 'முழு முதல்வன்' என்றும், 'ஈடு