பக்கம்:தெய்வத் திருமகன் (கவிதை).pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114


அவள் மெழுகுவர்த்தி போல் அவளுக்காக உருகியவளாய் ஒளி தந்து கொண்டிருந்தாள்.

காவல் தலைவன் காலடி அவன் மிதியடி கேட்டது ; இருவரும் தனித்தனிப் பிரிந்து ஒதுங்கிச் சென்றனர்

இவள்தானா சீதை? தான் தேடி வந்த கோதை ; அதற்கு விடை காண விரும்பினான் ; இராவணன் நடைவிளக்கம் தந்தது.

காலை நாளிதழ் தவறாமல் வந்து விழுவதைப் போல் அவன் அங்கு வந்து நின்றான்.

வார இதழ் சில ராசி பலன்கள், பரிசு அறிவிப்புகள், விளம்பரக் குவியல்கள் புரட்டிப் பார்க்காமல் தூர எறிவது போல அவனைத் துரும்பாக மதித்தாள்.

அவன் பச்சைத் தமிழில் கொச்சைச் சொற்களில் தன் இச்சைகளை வெளிப்படுத்தியவனாய்ப் பேசினான்.

"நாளை நாளை என்று நாட்கள் கழிகின்றன ;