பக்கம்:தெய்வத் திருமகன் (கவிதை).pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

151


தீக்குளித்தல் என்பது
 இந்த நாட்டுத் தீய பழக்கம்;
 அடுக்கி வைத்த சிதையில்
 படுக்க வைப்பர்; இதனை
 உடன் கட்டை ஏறுதல் என்பர்.
 மாமியின் கொடுமைக்கு அந்த
 வீட்டு மருமகள் மண்ணெண்ணெயை
 விரயமாக்குவது இன்றைய பத்திரிகைச் செய்தி.
 அரசியல் காரணங்களுக்குத்
 தொண்டர்கள் தீக்குளிப்பது.
 இப்படி இந்தத் தவறான
 கலாச்சாரம் பரதனையும் பற்றியது.
 இராமனுக்குச் செய்தி எட்டியது ;
 அவசரத் தந்தியாக
 அனுமன் வந்தான் ;
 தலைவர் வந்ததும்
 பழச்சாறு பருகத் தந்தார் ;
 உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.
 பினாமி ஆட்சியை
 உரியவரிடம் சேர்த்தான் ;
 நந்தியம் கிராமத்தை விட்டு
 அனைவரும் நகர்ந்தனர் ;
 இராமன் முடிசூடி
 நாட்டுக்கு உயர்வு தந்தான்.
 அயோத்தி இந்துக்களின்
 புண்ணிய ஷேத்திரம் ;
 அது இன்று அரசியலுக்குப்
 பாத்திரமும் ஆகி உள்ளது.