உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தெய்வத் திருமகன் (கவிதை).pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33


வசிட்டன் முன் இருந்து மந்திரம் ஒதிச் சடங்குகளை முடித்தான் ; சனகன் சீதையின் கரம் எடுத்து இராமன் பிடிக்க அவனிடம் சேர்ப்பித்தான்.

அன்பும் அறனும் இல்வாழ்வின் பண்பும் பயனும் என்று கூறி, ஆசி வழங்கினான் ; வாழ்த்தும் கூறினான்.

தாலி ஏறியதும் இருவரும் இணைந்து பந்தலைச் சுற்றித் தம்பதிகள் தாம் என்பதை அனைவரும் அறியச் செய்தனர்.

வாழ்த்துகள் பெற முன் அமர்ந்திருந்த பெரியவர்கள் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றனர் ; பெரியவர்களை மதிப்பது அவர்கள் காலில் விழுவது என்ற சம்பிரதாயம் காலம் காலமாகத் தொடர்ந்து வருகிறது. வசிட்டர் வாழ்த்தை அவள் முதலில் பெற்றாள் ; "திருமகளே தசரதனுக்கு மருமகள் ஆயினாள்" என்று பாராட்டிக் கூறினார்.

"செல்வத்துள் செல்வம்மக்களைப் பெறுதல் ; அதைவிட உயர்ந்தது தக்க மருமகளைப் பெறுதல் அதுவே மிக உயர்ந்த செல்வம்" என்று தசரதன் மகிழ்வு கொண்டான்.