உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தெய்வத் திருமகன் (கவிதை).pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

            35

அவனுக்கு மற்றொரு மகள் இருந்தாள்; ஊர்மிளை;அவள் பிறப்பு மகள்; அவளை இலக்குவனுக்கு முடித்தான். மற்றும் தன் உடன்பிறந்தவனுக்கு இரு பெண்கள்;அவர்களை பரதன் சத்துருக்கனனுக்கு முடித்தான்.

அங்கே மருஇருந்து விருந்து உண்டனர்; வந்தவர் அனைவரும் மகிழ்வு கொண்டு அங்குச் சிலநாள் தங்கினர்.

அயோத்தி திரும்புதல்

சொந்த நாடு நோக்கித் தேர்கள் செயல்பட்டன; தசரதன் பெருமகிழ்ச்சியோடு அயோத்தி திரும்பினான். அவன் எதிர்பார்க்கவில்லை வழி மறிப்புக் கொள்ளை; அது பொருள் பறிப்பு அல்ல; தேவை இல்லாத அவமதிப்பு.

கையில் ஒரு கோடரி வைத்து இருந்தான்;விறகு வெட்டி என்று நினைத்தனர்;அவன் தலைவெட்டி என்று பின்னால் தெரிந்தது. பரசுராமன் என்று அறிந்து கொண்டனர். அவன் அப்பனை யாரோ ஒரு அரச சாதியன் கொலை செய்து விட்டான்; பழி தீர்க்க இந்த வழி மறிப்புகள் செய்து வந்தான்.