உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தெய்வத் திருமகன் (கவிதை).pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37

            37

நிலவில் சுகம் காணத் தேவர் மகன்கள் நிலா முற்றத்தை அடைந்தனர் : பரதன் தன் பாட்டன் வீட்டுக்குக் கேகய நாட்டுக்குத் தாய்த்திருநாட்டுக்கு 'பேட்டும் கையுமாகப் பயணம் செய்தான்; சத்துருக்கனன் 'ஸ்டம்புகள்' எடுத்து உடன் சென்றான்; புது விருந்து உண்ணச் சென்றனர்.

  2. அயோத்தியா காண்டம்

முதற்காண்டம் பாலகாண்டம் அது இந்தக் காவியத்தின் பாலபாடம்; அவர்கள் திருமண விழாவும் பிள்ளைமைச் செயலே என்று கொள்ளலாம்.

அயோத்தியைத் தசரதன் ஆண்ட செய்தி இங்குக் கூறப்படுகிறது ; அதனோடு அவன் மாண்ட வரலாறும் செப்பப்படுகிறது.

வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை; அதற்குக் காரணம் அவன் நினைப்புவினை;அவன் வெளுப்பு நரை ; அது அவன் செவியில் வந்து சேதி செல்லமாகச் செப்பியது.

"முதுமை உன்னை அழைக்கிறது. பதுமைகளை வைத்து விளையாடுவது விடுக; தவம் செய்ய புறப்படு" என்று அவனுக்கு அது அறிவுறுத்தியது