பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147 வள்: ஈருயிரில் ஒருயிர் பிரிந்து தனித்திருக்க முடியுமா? வாசுகி: வன : பிரிய வேண்டிநேர்ந்து விட்டால் இயற்கையின் முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான். ஒரு சில ஆண்டுகளே உங்களுடன் வாழ்க்கை நடத்தினுலும், நான் நிறை வாழ்வு வாழ்ந்து விட்டேன் என்ற நிம்மதி எனக்கு இருக் கிறது, நாதா! வன் : அது உண்மைதான், வாசுகி நம் வாழ்வில் குறைப் படுவதற்கு ஒன்றுமேயில்லே. வன : ஆல்ை, நமக்கு பிள்ளை இல்லாததை ஊரார் சுட்டிக் காட்டி அது நம் வாழ்வில் பெருங்குறை என்கிருர்கனே! வள் அது என் செவியிலும் விழுந்திருக்கிறது. ள : என்னைப் பொறுத்த வரையில் நமக்கு கால்வழி சேய், எதுவும் இல்லையே என்ற கவலை சிறிதும் கிடையாது. கால் வழிசேயை விடப் பலவகையிலுஞ் சிறந்ததான நூல்வழி சேய் ஒன்றை பெற்றுக் கொடுத்திருக்கிறீர்களே! அது போதும் எனக்கு, மறுபிறப்பிலும் மகிழ்ச்சி கொள்வதற்கு. வன் ஒl - வன : கால் வழி சேய்களுக்குக் கால வரையறையுண்டு. ஆகுல், நீங்கள் அரிதின் ஈன்று புறந்தந்துள்ள நூல் வழி சேயோ ஊழி ஊழிக்காலம் அழியாது இருக்கக் கூடியது. அதற்குப் பெற்ருேர் நாம் என்று எண்ணும்போது எனக்கு. எவ்வளவு பெருமையும் பூசிப்புமாய் இருக்கிறது தெரியுமா? நாதா! வன் : வாசுகி! உன் மேதைமையை நான் எப்படி வியப் பேன்? நான் இயற்றியுள்ள திருக்குறளே உலகமெல்லாம்: பாராட்டிப் புகழ்ந்தாலும், நீ இப்போது தெரிவித்த புகழ்ச்சிக்கு அவை எதுவும் இணையாகாது. நீ என் இலக்கியப் படைப்பை எவ்வளவு நன்ருக எடை போட்டு வைத்திருக்கிருய்? -- - - -