பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 வாழ்த்தி வழங்கியுள்ள வாழ்த்துப் பாக்கள் என் வாழ்வை வளமாக்க உதவும் என நம்புகிறேன். காந்தீயச் செல்வரும், தொழில் மேதையுமான பொள் ளாச்சி தந்த புனிதர் நா. மகாலிங்கம் அவர்கள் தமது இராம. லிங்கர் பணி மன்றம் வாயிலாக, கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகச் சென்னே மாநகரிலும், பொருளாட்சி புரியும் கோவையிலும் திருவள்ளுவர், வள்ளலார், காந்தி ஆகியவர் களே நினைவு கூரும் வகையில் முப்பெரும் விழா ஒன்றை மிகச் சிறப்பாக நடத்தி வருகிருர், அவருடைய இச்சீரிய தொண்டு என்னை மிகவுங் கவர்ந்திருக்கிறது. மாணவப் பருவத்திலிருந்தே என்னுடைய இலக்கியங் களை ஆர்வத்துடன் படித்துப் பாராட்டி வருவதோடு, தாம் கலந்து கொள்ளும் எழுத்தாளர் மாநாடுகள், இலக்கியக் கூட் டங்களில் மறவாமல் என் இலக்கியப் பணியை உளமாரப் பாராட்டி வரும் மேதகு நண்பர் நா. மகாலிங்கம் அவர்கள் எனக்குப் புரவலருமாயிருந்து வருகிருர், அத்தகைய நண்பர் சிறப்பாக நடத்தி வரும் ஒப்பற்ற முப்பெரும் விழாவைப் பாராட்டும் வகையில் நான் இந்நாடக நூலே அவருக்கு உரிமையாக்கி என் பேரன்பையும் பெருமதிப்பையும் தெரி வித்துக் கொள்கிறேன். கடந்த நாற்பது ஆண்டுகளாக என்னுடைய இலக்கிய முயற்சிகளுக்கு ஆதரவளித்து ஊக்குவித்து வரும் தமிழ் கூறும் நல்லுலகம் இந்நாடகத்தையும் ஏற்றுப் போற்றும் என நான் நம்புகிறேன். அதுவோதயம் } நாரண - துரைக்கண்ணன் சென்னை-24. 28-6-71.