பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டுபிடிப்பை ஒரு தெறிப்பை நிச்சயமாகக் கொண்டுள்ளது. அதுதான் ரொம்ப முக்கியமென்றும், அதுதான் தொ.ப அவர்களின் அடையாளம் என்றும் சொல்ல வேண்டும். இவ்வளவு பரந்து விரிந்த தளத்தில் பண்பாட்டு அசைவுகள் பற்றித் தமிழில் வேறு யாரும் பேசியிருக்கிறார்களா என்பதும் எனக்குத் தெரியவில்லை. அவரது ஒவ்வொரு சிறு கட்டுரையும் விரிவான ஆய்வுகளுக்கான உள்ளுறையைத் தன்னுள் கொண்டிருப்பதை வாசகர்கள் வாசித்தறியலாம். தோழர் நாவாவும் ஆ. சிவசுப்பிரமணியனும் எனக்குள் ஏற்படுத்திய தாக்கங்களுக்குப் பிறகு ஆய்வுகளைத் தெருவில் இழுத்துப்போட்ட மனிதராகப் பல புதிய திறப்புகளை ஏற்படுத்தியவராக தொ.ப. எப்போதும் எனக்குள் நிற்கிறார்.

அடிப்படையில் பெரியாரியவாதியான அவர், நாட்டார் தெய்வங்களையும் தமிழ்நாட்டு வைணவத்தையும் முன்னிறுத்திப் பேசுவதற்கான நியாயங்கள் வலுவானவை. பெரியாரிய மார்க்சியச் சிந்தனைகளோடு அவற்றை இணைக்கும் அவரது கண்ணோட்டம் மிக முக்கியமானது. நாட்டார் தெய்வங்கள் என்ற சொல்லாட்சி நம் மனங்களில் சாமியாட்டம், குருதிப்பலி, பலி வடிவங்கள் ஆகிய படங்களாகவே மூட நம்பிக்கைகளோடு பின்னிப் பிணைந்தவையாக விரிந்துகிடப்பது உண்மை. ஆனால் அவை முற்றிலும் தவறான பிம்பங்கள் என்று அழுத்தமாகத் தன் கருத்துக்களை வாசகர் உணரும் விதமாக இந்நூலின் கட்டுரைகள் எடுத்துரைக்கின்றன. வட்டாரம் சார்ந்த உற்பத்தி அசைவுகளும் சமூக உளவியலும் எனப் பன்முகத்தன்மையைக் கொண்டாடும் நாட்டார் தெய்வங்கள் ஒரு மக்கள் பண்பாட்டின் அடையாளமாக நிற்கின்றன. ஆகவேதான் தமிழ் மக்களின் இருத்தலுக்கும் கண்ணியமான வாழ்வுக்குமான போராட்டமாகவே தன் வாழ்வை அமைத்துக்கொண்ட தந்தை பெரியார் நாட்டார் தெய்வங்களை எதிர்கொள்ளாமல் அதிகார மையமாகிய கோவில்களையும் பெருந்தெய்வங்களையும் அதனை மையப்படுத்திய மனித ஏற்றத்தாழ்வுகளையுமே எதிர்த்தார். பெருந் தெய்வங்கள் நம்பிக்கை சார்ந்தவை என்றும் நாட்டார் வழிபாட்டு முறைகளில் மூட நம்பிக்கை படிந்து கிடக்கிறதே என்றும் வாதிடுவோர்க்கு தொ.ப. முன்வைக்கும் கேள்வி ஆகச் சரியான பதிலாக அமைகிறது. "நம்பிக்கைகளுக்கும் மூட நம்பிக்கைகளுக்கும்