பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 சுந்தர சண்முகனார் இவர்கள் எப்படிப் பேசிக்கொள்ள முடியும்? மேற்கு நாடு களில் செட்டியார் முதலியார் போன்ற சாதி வேறுபாடு இல்லாதது மட்டுமல்ல; ஆண்சாதி பெண்சாதி என்ற வேறுபாடும் அவ்வளவாக இல்லை என்று சொல்லுகிறார்கள். ஆனால் நம் நாட்டிலோ, செட்டியார், முதலியார், நாடார், நாயகர் முதலிய சாதி வேறுபாடு போலவே, ஆண்சாதி பெண்சாதி என்ற சாதிவேறுபாடும் அழுத்தமாக உள்ளது. ஒருமுறை தமிழகத்தின் தலைநகராகிய சென்னையில் ஒரு கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா நடந்தது. அதற்கு வெளிநாடுகளிலிருந்தும் சிலர் வந்திருந்தனர். விழாவில், ஆண்கள் எல்லோரும் ஒரு பக்கத்திலும் பெண்கள் எல்லோரும் மற்றொரு பக்கத்திலும் அமர்ந்திருந்தனர். இந்தக் காட்சியைக் கண்ட மேலை நாட்டினர் ஒருவர் மிகவும் வியந்து பேசினார். ஏன்-இயற்கையாக எல்லோரும் கலந்து அமர்ந்தால் என்ன?' என்று ஒரு சிலரை நோக்கிக் கேட்டார். இது இந்த நாட்டு மரபு என்ற பதில் அவருக்குத் தரப்பட்டது. இப்படிக் கேட்ட அந்த வெள்ளையர் ஒர் ஆடவர் என்று எண்ணுகிறீர்களா? இல்லை யில்லை; அவர் ஒரு பெண்பிள்ளை. அதுதான் வியப்பினும் வியப்பு: இந்த மேலைநாட்டார் பழக்க வழக்கத்துக்கும் நம் பழக்க வழக்கத்துக்கும் நடுவே எத்துணை பெரிய இடைவெளி இந்நிலையில் அவர்கள் இருவரும் பேசிக் கொள்ளாததில் வியப்பில்லையே. தக்க பருவமுடைய ஆணையும் பெண்ணையும் நெருங்க விடக்கூடாது என்னும் கருத்துக்குத் துணை செய்வதற்காக, நெருப்பின் பக்கத்தில் வெண்ணெயை வைக்கலாமா? என்று கூறுவது உலக வழக்கம். இங்கே இவ்விருவருள் யாரை நெருப்பு என்பது? யாரை வெண்ணெய் என்பது? அந்தப் பெண் உட்கார்ந்தவள் உட்கார்ந்தவள்தான்; சுவரில் தீட்டிய ஒவியமேயானாள்; தனிக்கல்லில் அல்ல - திரையில் அல்ல -