பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 சுந்தர சண்முகனார் வகையில் ஏற்படும் சேர்க்கை நூற்றுக்கு நூறு பிற மகரந்தச் சேர்க்கையாகும்; அதாவது, ஆண் மரம் - செடி - கொடி களும் பெண் மரம் - செடி - கொடிகளும் தனித்தனியே - தனித்தனியிடத்தில் இருக்கும். ஆண் மரம் - செடி-கொடி களிலுள்ள ஆண்பூக்களில் இருக்கும் மகரந்தப் பொடி, பெண் மரம் - செடி - கொடிகளிலுள்ள பெண்பூக்களுக்குக் காற்று, வண்டு, தேனி முதலியவற்றின் மூலமாகக் கொண்டு செல்லப்பட்டுத் தொடர்பு ஏற்படும்; அதனால் பெண் பூக்கள் கருவுற்றுக் காய்க்கும். ஓர் அறிவு உயிர் எனப்படும் தாவரங்களுக்குள்ளும் ஆண் - பெண் உறவு எவ்வளவு அருமையாக நடக்கிறது பாருங்கள். இயற்கையின் விளையாட்டை என்னென்பது!" சரி! வண்டு, தேனி முதலியவை வராவிடின், ஆண் பூக்களிலிருந்து பெண் பூக்களுக்கு மகரந்தச் சேர்க்கை கிடைப்பது எப்படி?" 'வண்டுகளும் தேனிக்களும் வராமல் இருக்கமுடியாதே! பெண்பூக்கள் வண்டுகளையும் தேனிக்களையும் மயக்கித் தம் பக்கம் இழுக்கின்றனவே! வந்துதானே தீரவேண்டும்!" "அது என்ன புதிர் போடுகிறீர்கள்? பெண் பூக்கள் எப்படி மயக்குகின்றன?” - ஒ, அதுவா? பெண்பூக்கள் கவர்ச்சியான நிறமும் மனமும் உடையனவாயிருப்பதிலுள்ள நுண்பொருள் அது தான். தம் நிறத்தாலும் மணத்தாலும் வண்டுகளைக் கவர்ந்து இழுக்கின்றன. ஆண்பூக்களில் மொய்த்த வண்டு கள் பெண்பூக்களை நோக்கி வருகின்றன. இப்படியாக வண்டுகள் என்னும் தூதுவர் மூலம் ஆண்பூக்களின் தொடர்பு பெண்பூக்களுக்குக் கிடைக்கிறது. இதனை நம் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையவர்கள் கூட மிக அழகாகச் சொல்லியுள்ளாரே!.சூரிய காந்தி மலரைப்பற்றிய அவரது பாடலிலுள்ள