பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்விகத் திருமணம் 115 அந்தக் கடிதம்! படித்துப் பாருங்கள். பின்னர் நீங்களே என் நிலைமைக்குக் காரணம் தெரிந்து கொள்வீர்கள். பின்னர் நான் விரும்பினும், இங்கே நில்லாமல் நீங்களாகவே ஓடிவிடுவீர்கள். இதோ கடிதம்!' அன்றில் தந்த கடிதத்தை வாங்கி அறவணன் ஆவலுடன் படிக்கத் தொடங்கினார். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது: அன்புள்ள குழந்தை அன்றிலுக்கு, நலம். நலமே பெருகுக! நீ உன் கல்லூரி வேலையை ஒழுங்காகச் செய்து கொண்டிருப்பாய் என நம்புகிறேன். நீ சென்னைக்குச் சென்று நாளாகிறதால் ஒரு முறை ஊருக்கு வந்து போவது நல்லது. மேலும், உனக்குத் திருமண ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறேன், ஏறத் தாழத் திருமண ஏற்பாடு முடிந்துவிட்டது என்று கூடச் சொல்லலாம். இதற்கு முன் வந்த மாப்பிள்ளை வீட்டார் எவரும் நமக்கு ஒத்து வர வில்லை என்பது நீ அறிந்ததே! ஆனால் இப்போது கிடைத் திருப்பவர்கள் மிகவும் பொருத்தமானவர்கள். நம் வழிக்கு ஒத்து வருகிறார்கள், அதனால் அவர்களுக்கு முடிவும் கொடுத்துவிட்டேன். உன் அண்ணன் இளந்திரையனும் ஒத்துக் கொண்டான். ஆனால் உனது உடன்பாட்டைக் கேட்கவில்லையே என்பதாக நீ குறைப்படலாம். இனி நீ குறைப்பட்டுப் பயனில்லை. எல்லாம் முடிவாய்விட்டது. அன்றியும், உன்னைக் கேட்டுக்கொண்டிருந்தால் ஒன்றும் முடிவு பெறாது. உன் உடன் பாட்டைக் கேட்கவும் நான் விரும்ப வில்லை. ஏனெனில், உன்னைக் கேட்டால் நீ ஒத்தக் கொள்ளமாட்டாய் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.