பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்விகத் திருமணம் 117 கண்ட அப்பெரியவர் உன்னைப் பற்றித் தவறாக ஒன்றும் சொல்லவில்லை. உனக்குத் திருமணம் ஆகிவிட்டதாக அவர் எண்ணிக்கொண்டிருக்கிறார். கட்டிக் கொடுத்த கணவனுடன் நீ மகாபலிபுரத்தில் கலந்து பழகியதாகவே அவர் கருதிக்கொண்டிருக்கிறார். அவர் கடைத்தெருவில் என்னைக் கண்டவுடன். உங்கள் மகளுக்கு எப்போது திருமணம் நடந்தது? எனக்குத் தெரிவிக்கவே இல்லையே! உங்கள் மகளையும் மருமகனையும் சென்ற வாரம் மகாபலி புரத்தில் கண்டேன். ஆனால் அவர்களுக்கு என்னைத் தெரியாது. தகாதது இல்லை; பொருத்தமான இணைதான்! இருவரும்.அன்புடனும் இன்புடனும் அங்கும் இங்கும் சுற்றிப் பல காட்சிகளையும் கண்டு களித்தனர். இவர்களை நான் திருக்கழுக்குன்றம் மலையிலும் பார்த்தேன். இருவரிடையே யும் நல்ல ஒற்றுமை உணர்வும் உண்மையான உள்ளன்பும் இருப்பது கண்டு நானும் மகிழ்ச்சியடைந்தேன், போகட்டும்! புதுமணமக்கள் அல்லவா? இப்படித்தான் இருக்கவேண்டும். என்று சொல்லிக்கொண்டு போனார். அவர் சொன்னதிலிருந்து, என்ன நடந்திருக்கும் என நான் உய்த்துணர்ந்து கொண்டேன், அதாவது, நீ அயலான் ஒருவனுடன் கள்ளக் காதல் கொண்டு ஊர் சுற்றியிருக் கிறாய் என்பதை நான் புரிந்து கொண்டேன். ஆனால் அவரிடம் நான் ஒன்றும் சொல்லவில்லை. அவர் சொன்னதை ஒத்துக் கொண்டவன்போல, அதாவது, உனக்குத் திருமணம் நடந்துவிட்டது உண்மைதான் என்பதுபோல அவரிடம் நடித்து நான் மெல்ல நழுவிவிட்டேன். இந்தச் செய்தி இன்னும் உன் அம்மாவுக்கும் அண்ண னுக்கும் தெரியாது. தெரிந்தால் உன் அண்ணன் உன்னை என்ன செய்வானோ? உன் கள்ளக் காதலனை என்ன செய்வானோ? அல்லது தன்னைத் தான் என்ன செய்து கொள்வானோ? யார் அறிவார்? கடவுளுக்குத்தான் தெரியும்!