பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 சுந்தர சண்முகனார் பேசியிருக்கக் கூடுமே. பெண்ணாயிருப்பதால்தானே பேச முடியவில்லை. இயற்கையின் படைப்பில் எத்துணை கோணல் பெண்ணாயினும் வயது முதிர்ந்தவராயிருந்தால் இவ்வளவு நேரத்துக்கு இருவரும் பேசிக்கொண்டிருப்பார் களே. ஆணும் பெண்ணுமாக இரண்டு புதிய இளம் உள்ளங்கள் பேசிக்கொள்ள இயற்கையின் ஆணை இடந் தராதோ ஒருவன் இளம் பருவத்தில் அண்டைவிட்டு - எதிர்வீட்டுச் சிறுவர் சிறுமியருடன் கட்டிப் பிணைந்து விளையாடுகிறான். சில்லாண்டுகள் சென்றதும், சிறுமியர் பிரிந்துவிட, சிறுவரே மிஞ்சுகின்றனர். சிறுமியர் பருவப் பெண்களாகிக் காட்சிக்கும் அரியராகிவிடுகின்றனர். மணஞ் செய்துகொண்டு மக்களைப் பெற்று வாழ்க்கைப் பயணத்தில் பல கல் தொலைவைக் கடந்த பின்னருங்கூட, ஒர் ஆனும் ஒரு பெண்ணும் - அதாவது இளமையில் கட்டிப் புரண்டு விளையாடிய ஆணும் பெண்ணும் பேசிக்கொள்ளவே கூசுகின்றனர் எனில், பழகுவதெங்கே? இதற்குத்தான் பால் உணர்வு என்று பெயரோ இது உயிரினங்கட்குக் கிடைத்துள்ள இயற்கையின் அருட்கொடையோ! உயிர்க்குல வளர்ச்சியின் இரகசியம் இதில்தான் அடங்கியிருக்கிறதோ! அப்படியென்றால் இந்தக் கூச்ச உணர்வு வாழ்க! இதனால் தானே புகைவண்டியில் அமர்ந்திருக்கும் அந்த இளைஞரும் அவளும் பழகமுடியாமற் போயிற்று. • அவள் எந்த ஊருக்குச் செல்கிறாள் என்பதை அறிந்து கொள்வதில் இளைஞரின் ஆர்வம் கட்டுக்கடங்காது போயிற்று. அவளைக் கேட்டுவிட வேண்டும் என்று துடித்த மனத்திற்கு அடிமையாகிவிட்ட இளைஞர் அதைச் செய்தே விட்டார்: நீங்கள் எந்த ஊருக்குப் போகிறீர்கள்?" சென்னைக்கு'. $ 6 3 * SS SSAS SSAS SSAS A SAS SSAS S S S S YZ S T S