பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்விகத் திருமணம் 123 குறிப்பிட்ட கணவனும் முன்கூட்டித் தெய்வத்தாலேயே முடிவு செய்யப்பெற்று விடுகிறார்கள்-என்னும் இந்தக் கருத்து ஏற்றுக் கொள்ளக் கூடியதுதானா? அங்ஙனம் எனில், எத்தனையோ பேர்கள் மண விலக்குச் செய்து கொள் கின்றார்களே-மறுமணம் புரிந்து கொள்கின்றார்களே! இதையும் தெய்வம் முதலிலேயே முடிவு கட்டி அனுப்பு கிறதா என்ன? இதற்குத் தீர்வு காண வேண்டாவா? 'திருமணத்தைத் தெய்வம் தீர்மானிக்கிறது என்று கூறுவதில் உள்ள உட்-பொருள் யாது? சில சமயங்களில் திருமணம் சார்பாக நாம் என்னென்னவோ திட்ட மிடுகிறோம். இந்தப் பெண்ணுக்கு இந்த மாப்பிள்ளை-இந்த மாப்பிள்ளைக்கு இந்தப் பெண்-என்றெல்லாம் இளமை யிலேயே சிலர் திட்ட மிடுவதும் உண்டு. ஆனால் உரிய காலத்தில் அது நிறைவேறாமற் போவதும் உண்டு. வயது வந்த பின்னர்த் திட்டமிடப்பட்ட சில திருமணங்களும் தடைப்பட்டுப் போவதுண்டு. சிலருக்குத் தாம் விரும்பும் மாப்பிள்ளை கிடைப்பதில்லை; சிலருக்குத் தாம் விரும்பும் பெண் கிடைப்பதில்லை. சிலர் மட்டில், பெண்ணும் பிள்ளையும் ஒத்துக்கொண்டாலும், பெற்றோர்களுள் ஒரு தரப்பினரோ அல்லது இரு தரப்பினருமோ உடன் படுவதில்லை. சிலர்மட்டில், பெற்றோர்கள் உடன்படினும், பெண்ணோ அல்லது பிள்ளையோ உடன்படுவதில்லை. இவ்விரு சாராரும் ஒத்துக்கொளினும் உற்றார் உறவினரால் தடைப்பட்டுப் போவதும் உண்டு. காதல் திருமணங்களை, சாதி- சமயம் - இனம் - மொழி - நிறம் - பொருளாதாரம் முதலியவை தடுத்து நிறுத்திவிடுவதும் உண்டு. அதனால் தான், திருமணங்களைத் தெய்வம் தீர்மானிக்கிறது" என்னும் கருத்து சொல்லப்படுகிறது. மொத்தத்தில் பார்க்குமிடத்து, பெரும்பாலும் நினைத்த படி திருமணங்கள் நிறைவேறுவதில்லை. ஒரு பெண்ணுக்கு