பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 சுந்தர சண்முகனார் கொண்டிருப்பாரா? ஒரு வேளை, ஏதேனும் வடமொழிப் பெயர் பெற்றோரால் தனக்கு இடப்பட்டிருக்க, அதை மொழிபெயர்த்து மாற்றிக் கொண் டிருப்பாரா? எப்படிப் பார்த்தாலும், இவருக்கோ - இவர் குடும்பத்தார்க்கோ தமிழிலக்கியங்களில் நல்ல ஈடுபாடு இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. ஒர் உயர்ந்த தூய்மையான துறவியின் பெயரைக் கொண்டிருக்கிற இவர், ஏன் ஒரு பெண்ணிடம் வலிந்து வந்து பேச வேண்டும்? பிறகு நல்ல பதில் பெறாமல், மூக்குடைந்து மயங்கவேண்டும்? ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருப்பதில் இந்த ஆண்களுக்கு என்ன இன்பம் கிடைக்கிறதோ? இவர்களின் வேடிக்கை விளையாட்டுப் பொழுதுபோக்கு இன்பத்திற்கு ஊரார் வீட்டுப் பெண்கள் உடன்படவேண்டுமோ? ஆனால் இந்த அறவணன் கெட்ட எண்ணத்தோடுதான் பேச்சுக் கொடுத்தார் என்று எப்படிச் சொல்லமுடியும்? கள்ள மில்லாத வெள்ளை உள்ளத்தோடும் பேசியிருக்கலா மல்லவா? 'அறவணன்' என்னும் அருமையான பெயருடைய இவர் யாரோ? எதற்காகச் சென்னை செல்கிறாரோ? ஏதேனும் வேலையில் இருக்கிறாரோ? அல்லது வேலை தேடிச் செல்கிறாரோ? சரி சரி, யார் எப்படியானால் நமக்கென்ன? என்று அன்றில் ஏதேதோ எண்ணினாள். அவளது எண்ணத்தின் எழுச்சிக்குக் காரணம், அறவணன் என்னும் அந்த அழகுத் தமிழ்ப் பெயரே! க. சுப்பிரமணியப் பிள்ளையவர்கள் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு' என்னும் புத்தகம்தான் இப்போது அறவணனுடைய பொழுதைப் போக்கிக் கொண்டிருப்பது. தமிழிலக்கியங்கள் பற்றி அறிந்துகொள்ள விரும்புபவர் அப்புத்தகத்தின் உதவியை நாடலாம். தமிழிலக்கியங்கள்