பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Gத ய்விதத் 96067ಕ 25 பிளவை? இவன் எவ்வளவு பெரிய சிபார்சு கொண்டு வந்திருக்கிறானோ - அவன் யார் யாரைக் காக்கா பிடித்து வைத்திருக்கிறானோ? நம்மைப் பிடித்த ஏழரை ஆட்டையான் சனியனாக எல்லாப் பயல்களும் வந்து தொலைத்தான்களே! போதாக் குறைக்கு அவள் வேறு வரவேண்டுமா? அவள் பெண்ணாயிருப்பதால் அவளுக்குக் கிடைத்துவிடுமோ?' என்று உள்ளத்தில் அழுக்காறு (பொறாமை) கொண்டு கொதித்துக் கொந்தளித்துக் கொண்டிருந்தார்கள். வேறு எந்த வேலைக்கு எவர் போட்டியிட்டாலும் இத்தகைய உணர்வு தோன்றுவது இயல்பே. பலரை ஒன்று கூட்டி இப்படி ஒரு நிலைமை ஏற்படச் செய்யும் இன்டர்வியூ" முறை என்பது அப்பப்பா பொல்லாதது. அறிமுகம் ஆனவர் வர்களுக்குள்ளேயுங்கூட அன்பைக் கெடுத்து, அலைச்சலை யும் புகைச்சலையும் உண்டாக்குகின்ற அந்த முறை அம்மம்மா கொடிது கொடிது! இதைவிட்டால் வேறுவழி யில்லையோ? இத்தனை பேருள் வெற்றியாருக்கோ? அத்தனை பேரும், 'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று புரியப்போகும் போர்விரர்களாக அமர்ந்திருந்தனர். அந்தக் காலத்தில் திருமணத்திற்காகச் சுயம்வரம் நடந்ததென்றால், இந்தக் காலத்தில் வேலைக்காக இன்டர் வியூ நடக்கிறது. அந்தக் காலத்தில் எப்படித்தான் சுயம்வரத்திற்கு ஆட்கள் வந்தார் களோ தெரியவில்லை. சுயம்வரம் என்றால்:- ஒரு நாட்டின் அரசகுமாரிக்குத் திருமணம் செய்யவேண்டுமாயின், மண மகனைத் தேர்ந்தெடுப்பதற்காக, அவனி ஐம்பத்தாறு தேயத்து அரசகுமாரர்களுக்கும் அழைப்பு அனுப்புவார்கள். அரசகுமாரர்கள் அனைவரும், மணமகளான அரசகுமாரி யின் அரண்மனையில் குறித்த காலத்தில் வந்து கூடுவர். அவர்கள் எதிரே, கைகளில் மாலை ஏந்திக்கொண்டு அரச குமாரி அன்னநடை போட்டு வருவாள். அவளுடைய