பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 சுந்தர சண்முகனார் 'என்ன, அன்றிலா! புதுப்பெயரா யிருக்கிறதே! அன்றிலைப் பற்றி இலக்கியத்தில்தான் படித்திருக்கிறோம் - நேரில் பார்த்ததில்லையே! ஐயா, நீங்கள் அன்றில் பறவையைப் பார்த்திருக்கிறீர்களா? இல்லாவிட்டால் இதோ இருக்கிறது - பார்த்துக் கொள்ளுங்கள்! அப்புறம் பறந்துவிடப் போகிறது!" என்று இருவர் பேசிக்கொண்டனர். 'அன்றில் எப்போதும் இணைபிரியாதிருக்கும் என்று சொல்வார்களே - இதன் துணை எங்கே?' என்று வேறு இருவர் வேடிக்கை செய்து கொண்டனர். இது ஒரு சுயம்வர மண்டபம் போல் இருக்கிறதல்லவா? அன்றில்தான் அரசகுமாரியாகிய மணமகள் - மற்றவர்கள் பலநாட்டு அரசகுமாரர்கள்' என்று பேசிக்கொண்டு மற்றும் இருவர் மகிழ்ந்தனர். 'இவள் எவ்வளவு அழகானவள் - அடக்கமானவள்! இவள் பெயர் எத்துணை கவின் உடையது - கவர்ச்சியானது! இப்படி யொரு படித்த - அழகான - அடக்கமான பெண் நமக்கு மனைவியாக வாய்ப்பதரிது' என்று வாயில் உமிழ்நீர் ஊறிற்று ஒருசிலர்க்கு. அன்றில் என்னும் பெயர், அங்கிருந்தவர்களின் முளைகட்கு நன்கு வேலை கொடுத்திருப்பதை அன்றில் நன்றாகப் புரிந்து கொண்டாள்; அவர்கள் பேசிக்கொள்வது காதில் தெளிவாக விழாவிட்டாலும், தன் பெயரைப் பற்றித்தான் திறனாய்வு' (Criticism) செய்து கொண்டிருக் கிறார்கள் என்பது வரையிலும் திட்டவட்டமாகத் தெரிந்து கொண்டாள். அவள் யாரைப் பார்த்தாலும், அவர் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதை மறுமுறையும் கண்டாள். அறவணன் மட்டும், மணிமேகலை என்னும் காவியத்தில் வருகின்ற அறவண அடிகளாகவே காட்சி யளித்தார். அன்றில் எத்தனைமுறை ஏறிட்டுப் பார்த்தும் அவர் அவளை ஒருமுறை கூட பார்க்கவேயில்லை. அவளுக்கு அவர் காட்சிக்கு அரியராகிவிட்டார். தன்னை அடிக்கடிப்