பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 சுந்தர சண்முகனார் இவனுக்கென்று ஏதேனும் தனித் தகுதி இருக்க வேண்டாவா? ஆடம்பரமாக உண்டு உடுத்து ஊர் சுற்றி வரும் மாபெரும் சாதனைக்காகவா அன்றில்களை மாசிலாமணிகள் மணஞ்செய்து கொடுக்க முன்வருவார்கள்? எவ்வளவோ நகைகள் போடுவதாகச் சொல்லிக் கொண்டு வந்த உதவாக் கரைகளை மாசிலாமணி உதறித் தள்ளி விட்டார். பெண்ணுக்கேற்ற அழகும் ஆற்றலும் படிப்பும் பண்பும் உள்ள மாப்பிள்ளையாகத் தேடினார். அன்றிலுக்கேற்ற அழகு மாப்பிள்ளை அறிவு மாப்பிள்ளை அப்போது கிடைக்காமலும் இல்லை. ஆனால், தேடித் தேடிப் போய்ப் பார்த்த மாப்பிள்ளைமார்களின் பெற்றோர்கள் பேராசைக்காரர்களாக இருந்தார்கள். பெண் வீட்டுக்காரர் வலிய வந்ததனால் மாப்பிள்ளை வீட்டார்க்கு இளப்பமாய் விட்டது போலும் காசுக்கு ஒன்று பிசுக்கு பத்து என்ற கதையாய், மாசிலாமணியை நோக்கி, "நீங்கள் உங்கள் பெண்ணுடன், இன்னின்ன பொருள்களை லாரி லாரியாய் - கூட்சு கூட்சாய் - கப்பல் கப்பலாய்க் கொண்டு வந்து கொட்டிக் கோபுரம்போல் குவிக்க வேண்டும்' என்று பட்டியல் (லிஸ்ட்) நீட்டினார்கள். அரசாங்கத்தார் அச்சிட்டுள்ள பணத்தாள்கள் (கரன்சி நோட்) அத்தனையை யும் கொடுத்தாலுங் கூட ஒரு பெரிய தீவு முழுவதையும் எழுதி வைத்தாலுங்கூட அவர்களுக்குத் தெவிட்டாது போலும்! மாசிலாமணி இவ்வளவுக்கு எங்கே போவார்? பெண் கேட்க வரும் சில பேரறிவாளர்கள், பெண்ணுக்கு ஏராளமாக நகை போட வேண்டும் - வீடு, நிலம் எல்லாம் எழுதி வைக்க வேண்டும் - கையிலும் ஐயாயிரம் பத்தாயிரம் என்று தர வேண்டும் - ஆடம்பர மாகத் திருமணமும் செய்து வைக்க வேண்டும்' என்று பட்டியல் போட்டு அட்டவணை கொடுக்கிறார்களே, இவர்கள், பெண்ணுக்கென்று என்ன செய்யப் போகிறார்