பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 சுந்தர சண்முகனார் திருமணம் கை கூடாதது அன்றிலுக்கு ஒருவகையில் நன்மையாகவே முடிந்தது, அவள் சென்னைக்கு வந்து தாயைப் பெற்ற பாட்டி வீட்டில் தங்கி ஒரு கல்லூரியில் இடைநிலை (இன்டர் மெடியட்) வகுப்பில் சேர்ந்து படிக்கலானாள். திருச்சியில் தன் திருமண முயற்சியின் சார்பாக நடந்த நிகழ்ச்சிகள் அவளுக்கு வேதனை யளித்த தோடு, திருமணத்திலேயே ஒருவகை வெறுப்பையும் அளித்திருந்தன, இப்போது சென்னையில் வந்து தங்கிப் படிப்பது அவளுக்குப் பெரிய ஆறுதலாக இருந்தது. தன் அண்ணன் தாண்டவராயனைத் தாக்கியதால் ஏற்பட்ட களங்கமும் கவலையும் மறையட்டும் என்று கருதியே அவள் திருச்சியில் படிக்காமல் சென்னைக்கு வந்து விட்டாள். அங்கே இரண்டாண்டு படித்துக் கல்லூரி இடை நிலை (இன்டர்மெடியட்) வகுப்புத் தேர்விலும் வெற்றி பெற்றாள். . இரண்டாண்டுகட்குப் பிறகு மீண்டும் மாசிலாமணி அன்றிலின் திருமணத்திற்கு முயற்சி எடுக்கத்தொடங் கினார். அன்றில் வயதுக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகி விட்டன. இனியும் அவளுடைய திருமணத்தைத் தள்ளிப் போடுவதற் கில்லை. மேலும். அவள் அண்ணன் இளந்திரையனுக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும், "கன்னியிருக்கக் காளை மணை ஏறக் கூடாது' என்றபடி மகள் அன்றிலின் திருமணத்தை முதலில் முடித்துப் பின்னர் இளந்திரையன் திருமணத்தைக் கவனிக்கவேண்டும் என்று மாசிலாமணி திட்டமிட்டிருந்தார், அதனால் உடனடியாக அன்றிலின் திருமணத்தை அந்த ஆண்டே எப்படியாவது முடித்து விடவேண்டும் என்று காப்பு கட்டிக் கொண்டார். இரண்டாண்டுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது அன்றில் ஒரளவு துணிவு உடையவளாகக் காணப்பட்டாள்.