பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 சுந்தர சண்முகனார் புதிதாக வழக்கறிஞர் (வக்கீல்) வேலை தொடங்கி யிருக்கிறார். அவரைப் பொறுத்த வரையிலும் பெண் வீட்டார் எல்லாருக்கும் எல்லா வகையிலும் மனநிறைவு தான். ஆனால் அவர்கட்குப் பெரிய தலைவலியாகத் தாண்டவராயன் இருந்தார். புரையோடிய புண்ணாக அவர் அழிவு வேலை செய்தார். அன்றிலின் மேலும் அவள் குடும்பத்தார் மேலும் இல்லாததும் பொல்லாததுமாக மாசுமறுக்கள் பல கற்பனையால் படைத்து மாப்பிள்ளை வழக்கறிஞர் காதுவரையும் எட்டவிட்டார். அதனால் அந்த வாய்ப்பும் கத்தரித்துக் கொண்டது. அடுத்தடுத்து நேர்ந்துபோன இத்தகு நிகழ்ச்சிகள் சில அன்றிலின் எண்ணத்தில் ஒரு பெரிய திருப்பத்தை உண்டாக்கின. மண வாழ்க்கையையே அவள் வெறுத்தாள். ஒரு பெண் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ முடியாதா? வாழக் கூடாதா? அப்படி எத்தனையோ பெண்கள் வாழ்கிறார்களே-என்றெல்லாம் என்னென்னவோ கணக்குப் போட்டுப் பார்த்தாள்; தான் நீண்டநேரம் சிந்தித்துப் போட்ட கணக்குக்கு ஏதோ விடையைக் கண்டு பிடித்தாள். அவள் வரைக்கும் அது சரியான விடையாகவே தென்பட்டது. அதாவது: 'பெண்கள் கொடிகள் என்றும், அக்கொடிகள் படர் வதற்குரிய கொடிமரங்கள் ஆண்கள் என்றும் சமூகம் பேசுவதோடு, எழுதியும் வைக்கப்பட்டிருக்கிறது. கொழு கொம்பின்றிக் கொடி படராதாம் - தரையில் படர முடியாதாம். இந்தக் கொள்கையின்படி, மரம் விழுந்தால் கொடியின் வாழ்வும் போயிற்று. ஏன் - பெண்ணைக் கொடியாகச் சொல்லாமல், தனித்து நின்று வாழும் செடியாகச் சொன்னால் என்ன? ஆண்பனைக்கு எதிராகப் பெண்பனை என ஒன்றிருப்பது போல், பெண்ணைத் தனி