பக்கம்:தெய்வ மலர்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

யோசித்து யோசித்துப் பார்த்தேன். என் மூளைக்கு எதுவும் எட்டவில்லை. புதிதாக வந்த காளைமாட்டுக்கு கொட்டகை ஒன்று கட்டப் போவதாக கேள்விப்பட்டதும், எனக்கு இன்னும் ஆத்திரம்தான் வந்தது. என்ன செய்வது? எப்படி காண்பிப்பது?

கொஞ்ச தூரம் நடந்தால் யோசனை வரும் என்று மெதுவாக நடந்தேன். எதையோ வரிசையாக அடுக்கி வைத்திருந்தார்கள். அதன் பக்கத்தில் போய் பார்க்கலாம் என்று போனேன். மெதுவாக அதன்மேல் சாய்ந்தேன். என்ன ஆச்சரியம்! நான் சாய்ந்ததும் திபுதிபுவென்று எல்லாம் கீழே விழுந்தன.

நான் பயந்து கொண்டு ஒடியே போய்விட்டேன்.

பிறகு யோசித்துப் பார்த்தேன். எனக்கு எவ்வளவு சக்தி இருந்தால், தி.புதிபுவென்று அவை சாய்ந்து விழும்? முதலாளிக்கு இதை கூறவேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், அவர்ஊரில் இல்லை என்ருர்கள்.

அடுத்த நாள் கட்டிடம் கட்ட செங்கற்களைக் கொண்டு வந்து அடுக்கி வைத்திருந்தார்கள். எனக்கு என்சக்தியை காட்ட வேண்டும் என்று ஆசை வந்தது. போய் மெதுவாக இடித்தேன். என்ன ஆச்சரியம்! செங்கல் பொத பொதவென்று சரிந்து விழுந்தது. என் உடலில் இருக்கும் பலத்தைக் கண்டு நானே ஆச்சரியப்பட்டேன்- அன்றும் என் எஜமான் ஊரில் இல்லாததால், சொல்ல முடியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெய்வ_மலர்.pdf/29&oldid=580302" இலிருந்து மீள்விக்கப்பட்டது