பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செழியன் துறவு 127 பிடிக்கவேண்டும் என்பதைச் சேரமன்னர் அறியாதவரா? நெ. செ : இந்த வெற்றியை ஏன் அவரிடம் கூறினர்? அதைக் கேட்டு அவர் இடிவானேன்? நாமே நமது வெற்றியை மிகுத்துப் பேசுவது அழகாகுமா? வீ. பா : மன்னர் மன்னரே, என்னை மன்னிக்க வேண்டும். நமது வெற்றியை நாமே கூறிக் கொண்டு பெருமை அடையவேண்டும் என்ற கருத்தால் நான் கூறவில்லை. நெ. செ சரி! வேறு ஏதாவது காரணம் உண்டா? வீ. பா : ஆம்: சேரமான் இரும்பொறை இந்த இரண்டு கோட்டைகளையும் பிடிக்கப் பல நாட்களாக நினைந்திருந்தார்; நீங்கள் அரசராவதற்கு முன்னரே ஒரு முறை முயன்றார்; ஆனால், தோல்விதான் எய்தினார். நெ. செ ஆ! அப்படியா? நான் இதுவரை இச் செய்தியை அறிந்தேனில்லை. இக் கோட்டைகளைப் பிடிக்க முடியாத இவரா பாண்டி நாட்டை எதிர்த்தார்? வி. பா : அரசரே, மன்னிக்கவேண்டும். சேரர் படை பலத்தை நாம் குறைத்து எண்ணிவிடக்கூடாது. வேள்எவ்வியுடன் செய்த போரிலும், நம்முடன் தொடுத்த போரிலும் அவர் தோற்றதற்குத் தக்க காரணம் உண்டு. . - - நெ. செ : அப்படியா? அமைச்சரே, நீர் சேரருக்குக் கூட அமைச்சராக இருக்கலாம்போலத் தோன்றுகிறதே! நல்லது! அக் காரணம் என்ன? - - வி. பா : இந்த இரண்டு போர்களும் சேரர் காரணமில்லாமல் தொடுத்தார். சேரப் படைவீரர்கள் தங்கள் நாட்டைக் காப்பதிலும், காரணத்துடன் செய்யப்படும்