பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

  • செழியன் துறவு

1ՌIT - நெ. վՈIT - ዚዐIT. நெ. IslIT. மரு : ஏன்? போர் என்றால் பாண்டி மக்கள் பதினாயிரவரும் சேர மக்கள் பதினாயிரவரும் சாகத் தானே வேண்டும்? செ போர் செய்தல் அரசராகிய நமக்குச் சிறப்பே தவிர இழுக்கல்லவே? மரு ஆம் அரசே, சிறப்புத்தான். பழிவாங்கப் போரிடுதல் இழிவன்றோ? செ : காரணம் எதுவாக இருப்பினும், போரிடுதல் வீரர்க்கு இழுக்கல்லவே? மரு : காரணந்தான் உயிர்நிலை அரசே போராகிய காரியம் இரண்டாவதுதான். செய்கின்ற செயலைப் பெரிதாகத் தமிழர் மதிக்கவில்லை; அச் செயலின் பின் உள்ள மன நிலையைத்தான் காண முற்பட்டனர். போர் செய்தல் தமிழ் மரபுதான். ஆனால், ஒருவர் தம் காதலியை இழந்த துயரத்தைப் போக்கப் பதினாயிரவரை அதே துயரத்தில் ஆழ்த்துவது என்ன முறை? செ : பதினாயிரவர் என்னைப்போலத் துயரை அடைவர் என்று ஏன் கூறுகிறீர்கள்? மரு : போரில் இறக்கின்ற வீரன் ஒவ்வொருவனுடைய காதலியும் உங்களைப் போலத் துயரமடைவாள் அன்றோ? உங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது; எனவே, பழிவாங்க முற்பட்டீர்கள். அந்த ஒவ்வொரு காதலியும் தன் காதலனை இழந்ததற்காகப் பழிவாங்கும் வாய்ப்பைப் பெற்றால், நாட்டின் நிலை என்ன ஆகும்? உங்கள் துயரினும் அவர்கள் துயரம் குறைந்தது என்று நினைக்கிறீர்களா? - செ என் துயரத்தைப்போலப் பிறர் அனுபவிக்க இயலாது என்றே நம்புகிறேன். -