பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புனிதவதி. நாடக பாத்திரங்கள் 1. புனிதவதி 4. தனகோடி செட்டியார் 2. தனதத்தன் 5. கோடீசுவர செட்டியார் 3. பரமதத்தன் 6. இளம்புனிதவதி காட்சி 1 (காரைக்காலில் ஒரு திருமண வீடு: கோடீசுவர செட்டியார், தனகோடி செட்டியார்) (மேளவாத்திய இசை முழங்குகிறது) கோடி : என்ன தனகோடி செட்டியாரே, எவ்வளவு பொருத்தமான மணமக்கள் பார்த்தீரா? தனதத்த செட்டியார் மிகவும் தவஞ்செய்து பெற்ற மகளுக்குத் தக்க மணாளனைத் தேடிப் பிடித்துவிட்டார்: தனகோடி : புனிதவதியைப் பெறுவதற்குத் தனதத்தர் புண்ணியஞ் செய்தார் என்பதில் ஐயமில்லை. ஆனால். கோடி : (கலவரம் நிறைந்த குரலில்) என்ன? ஆனால். என்று இழுக்கிறீர்களே? - தனகோ : ஒன்றுமில்லை. கோடீசுவர செட்டியாரே, ஏன் கலவரமடைகிறீர்? தக்க மணாளன் என்று கூறினிரே, அதைத்தான் யோசனை செய்து பார்க்கிறேன்! கோடி : ஏன், பண்புடையவனல்லவா அவன்?