பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புனிதவதி 203 தனகோ : அம்மா, புனிதவதி, இவர் கூறுவது. புனித பெருமானே, உன் திருவருள் இதுவானால், யான் செய்வது என்ன இருக்கிறது? - (பாடுகிறாார்) 'ஈங்கிவன் குறித்த கொள்கை இது:இனி இவனுக் காகத் தாங்கிய வனப்பு நின்ற - தசைப்பொதி கழித்து) இங்கு) உன்பால் ஆங்குநின் தாள்கள் போற்றும் பேய்வடிவு அடியே னுக்குப் பாங்குற வேண்டும் ஐயா ! படர்சடைக் கங்கை யானே ! (புனிதவதியார் பேய் வடிவாக மாறுகிறார்) தனகோ : ஆ! அம்மா புனிதவதி, பரமதத்தன் கூறியது எவ்வளவு உண்மை! ஆம்! இந்தப் பேய் வடிவு உங்களுடைய குறிக்கோளுக்கு ஏற்றதுதான். வேண்டுவார் வேண்டுவதே ஈய வல்ல பெருமானை வேண்டிப்பெற்ற வடிவம் இது. . பரம : உறவினர்களே, இனி என் சொற்களில் யாருக்கும் ஐயமிராதென்றே நினைக்கிறேன். ஊன் அடை வனப்பை எல்லாம் உதறி எற்புடம்பே ஆக, வானமும் மண்ணும் எல்லாம் வணங்கு பேய் வடிவமான இவரை அனைவரும் வணங்குங்கள். . இளம்புனிதவதி : அப்பா, அப்பா, எனக்கு ஒன்றுமே விளங்கவில்லையே! இங்கு நின்றவர் யார்? இப்பொழுது இருக்கும் இவ்வெலும்புக் கூடு யார்? பரம : அம்மா குழந்தை, இப்பொழுதே இவரை வணங்கிக்கொள். இதோ இவர் புறப்பட்டுவிட்டார்.