பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 புனிதவதி வேண்டுமென்ற விருப்பால் வடதிசை நோக்கிச் சென்றார் அம்மா. புனித. 2 : நல்ல அதிர்ஷ்டம் இல்லாமையால் யான் அப்பொழுது சிறியவளாய் இருந்துவிட்டேன். பேய் வடிவு கொண்டு அவர் வடதிசையில் சென்றதை எத்தன்ை மக்கள் பார்த்திருப்பார்கள்! அவர்களே புண்ணியசாலிகள்! பரம : அவர் பேய் வடிவைக் கண்டு அஞ்சி ஓடினர் பலர். அவர் வடிவை எள்ளி நகையாடினர் பலர். கண்டதே கண்டு, கேட்டதே கேட்டு, உண்டதே உண்டு வாழும் இம் மக்கள் கூட்டம் புதுமையும் சிறப்பும் காணும்பொழுது எளிதில் ஏற்றுக்கொள்வதில்லை. புனித. 2 : அவர்கள் இப்படி எள்ளி நகையாடியதை அம்மையார் நல்ல வேளையாகக் கேட்டிருக்க மாட்டாரல்லவா? LIITUD . ஏன்? அவர்கள் பேசியது நன்றாக அவர் காதிலும் விழுந்தது. தாழ்ந்த பண்பாடுடையவர்கள் பெரியவர்களை அவமதிக்கும்பொழுதுகூட உரத்துத் தான் பேசுவார்கள் புனித 2 : ஐயோ! அப்படியானால் அம்மையார் மிகவும் வருத்தப்பட்டிருப்பார்களே! பரம : அம்மா, நீ குழந்தையாகலின் இவ்வாறு நினைக்கிறாய். ஆனால், அவர் வருத்தப்படவில்லை. அவர் அதற்குப் பதிலாக, பேசியவர்களின் அறியாமையை நினைந்து சிரித்துவிட்டு என்ன கூறினார் தெரியுமா? புனித.2 : என்ன அப்பா கூறினார்? பரம : “அண்டர்நா யகனார் எம்மை அறிவரேல் அறியா வாய்மை எண்திசை மாக்களுக்கு யான் எவ்வுரு வாயின் என்னாம்? என்று பாடினாரம்மா.