பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 முத்தநாதன் முத்த அது சரி, தத்தை, இதில் என்ன இழிவு இருக்கிறது? தத்தை : என்ன இழிவு என்று கேட்கிறீர்களே! ஒருவன் பகைமை கொண்டால், போரிட்டு வெற்றி பெறுவது ஆண்மையா அல்லது வஞ்சகமாக வெல்வது சிறப்பா? உங்களுக்குக் கூட ஆண்மை மங்கிவிட்டதா என்ன ? முத்த பகைவனை அழிப்பதில் வழி துறைகள் பார்ப்பதை நான் என்றும் ஆதரிப்பதில்லை. தத்தை நன்றாயிருக்கிறது. உங்கள் நியாயம் ! அப்படியானால், இந்த உலகில் ஒருவரை ஒருவர் நம்பி வாழ இடமில்லாமல் போய்விடும்! முத்த என்ன உளறுகிறாய் தத்தை பகைவனை வஞ்சகத்தால் கொல்வதற்கும், ஒருவரை ஒருவர் நம்பி வாழ்வதற்கும் என்ன தொடர்பு? தத்தை : இன்னுமா விளங்கவில்லை? அடியார் என்று. நம்பித்தானே அவர் அந்தப் பாதகனைத் தனியே தம்முடன் இருக்கச் செய்தார்? பகைவன் என்று. தெரிந்திருந்தால், சும்மா விட்டிருப்பாரா? பாவம்! முத்த தவறான இடத்தில் நம்பிக்கை வைத்தால், அதற்குத் தகுந்த தண்டனையை அனுபவிக்க வேண்டுவது தானே? . தத்தை நன்றாயிருக்கிறது. உங்கள் நியாயம்! நம்பிக்கை வைப்பதற்கு இத்தனை சோதனை செய்வதானால், உலகில் கணவனும் மனைவியுமாய் வாழ்பவர்கூட ஒருவர்மேல் ஒருவர் நம்பிக்கை வைத்து வாழ முடியாற்போய்விடுமே! முத்த தன்னுடைய நம்பிக்கை பழுது என்று தெரிந் திருந்தால், மெய்ப்பொருள் என்ன செய்திருப்பான்?