பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெள்ளாற்று நந்தி Ö, 33 (சகானா) சிவனை முழுவதும் மறவாத சிந்தையான் செயமுன் உறவு தவிராத நந்தியூர்க் குவளை மலரின் மதுவாரும் வண்டுகாள் குமிழி சுழியில் விளையாடு தும்பியே அவனி மழைபெய் குளிர்காலம் வந்ததே அவரும் அவதி சொனநாளும் வந்ததே கவலை பெரிது பழிகாரர் வந்திலார் கணவர் உறவு கதையாய் முடிந்ததே. அமை : அரசே, வாருங்கள் போகலாம். . நந்தி : அமைச்சரே, இவளைக் கண்டு, இப் பாடலை எங்குக் கற்றாள் என்று அறியாமல் யான் வரமாட்டேன். அமைச்சரே! எவ்வளவு இனிமையான பாடல். இனிமை எனும் பொருளுடைய தமிழ் மொழியில் இனிமைஎலாம் சாறாகப் பிழிந்து இங்ங்ணம் யார் கவிதையாகத் தந்தனர்: கார்கால வருணனையா இது? இல்லை, தலைவனைப் பிரிந்த தலைவியின் துயரத்தை அப்படியே பிழிந்து எடுத்து அதனுடன், கவிஞனுடைய கற்பனையையும் உடன் கூட்டித் தந்துள்ளானே? ஆ. ஆ. எத்தனை பிறவி எடுத்தாலும். எங்கே அடுத்த பாடல். அமை : அரசே, நாம் இரவில் மாறுவேடத்துடன் இங்கு வந்துள்ளோம் என்பதை நினைவுபடுத்த விரும்பு கிறேன். காலையில் இவளை அழைத்து, உண்மையை அறியலாம். 竇 戴 資 (சேவகன், தோழி, செல்வி) (செல்வி வீடு) சேவகன் : (கதவைத் தட்டி) வீட்டில் யார்?