பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 தெள்ளாற்று நந்தி ஒருவன்தான் அரசர் உயிரைக் காப்பாற்ற முடியும். அமைச்சரே, ஒலையை என்னிடம் கொடுங்கள். - நானே நேரில் போகிறேன். அமை : தங்களால் அரசரைக் காப்பாற்ற முடியும் என்றா சொல்கிறீர்கள்? புல : கடைசி முயற்சி. வெற்றி பெற்றாலும் பெறலாம் அல்லவா? நான் சென்றுவருகிறேன். அம்ை : தண்டமிழ் - மொழிக்குக் கொலை செய்யும் கொடுமையும் உண்டு என்ற கறை வராமல் காப்பாற்றுங்கள். - புல தமிழ் மொழி என்றைக்கும் தூய்மையானது அமைச்சரே, தன் செல்வத்தையே பிறர்க்களிக்கும் ஒரு வள்ளல் கொடை ஓலை எழுதுகிறான் எழுதுகோலைப் பயன்படுத்தி; அதே எழுதுகோலால், கள்ளக் கையெழுத்திட்டு, கலகத்தையும் சூழ்ச்சியை யும் விளைக்கிறான் வேறொருவன். தமிழ் மொழிக்கு இந்தக் கயவர்களால் மாசு ஏற்பட்டுவிடாது. நந்திவர்மனைப்போல் உள்ள வள்ளல்கள் இருக்கும் வரை தமிழுக்குக் குறைவு ஏது? நான் வருகிறேன். • • 曹 (காஞ்சித் தெருவில் பச்சைமட்டைப் பந்தலின் கீழ்) (அரசன், அமைச்சன், கற்றுச்சொல்லி முதலியோர்) நாதநாமக்கிரியை) மங்கையர்கண் புனல்பொழிய மழைபொழியும் காலம் மாரவேள் சிலைகுனிக்க மயில்களிக்கும் காலம் கொங்கைகளும் கொன்றைகளும் பொன்சொரியும் கோகனக நகைமுல்லை முகைநகைக்கும் காலம்