பக்கம்:தெவிட்டாத திருக்குறள் 4.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பதிப்புரை "தெவிட்டாத திருக்குறள்" வரிசையிலே நான்காவது நூல் வருகின்றது. பாராட்டுக்கள் எழுதியனுப்பிய அன்பர்கட்கும், நூற்றுக்கணக்கில் தருவிக்கும் அன்பர்கட்கும், இன்னும் எல்லோர்க்கும் மிகவும் நன்றி. எங்கள் வெளியீட்டின் மேலட்டை வண்ண ஓவியத்துடன் திகழவேண்டுமென விரும்பு கின்றனர் சிலர். அதனால் பொருட்செலவு மிக, நூலின் விலை ஏறநேரிடும். நல்ல கருத்துக்கள் பரவவேண்டும் என்பதற்காக ஆசிரியர் பயன் கருதாது எழுதியளிக்க, அடக்க விலைக்கு நூல் தரப் படுகிறது. ஆயினும் முயல்வோம். எங்கள் நூலைக் கற்பவர், மேலும் பலர் வாங்கிப்படிக்கச் செய்யின், அது திருக்குறள் பரவச் செய்யும் பெரும் பணி யாகும். வள்ளுவன் குறளை வாரி வழங்குக! சிங்கார குமரேசன், பதிப்பக உரிமையாளர். ஆசிரியரின் பிறநூல்களுட் சில : 1. வீடும் விளக்கும் ரூ. 1-25 ந.பை 2. எழுத்தாளர் துணைவன் 1-25 3. செந்தமிழாற்றுப்படை 0-50 (அரசினரால் நூல் நிலைய அங்கீகாரம் பெற்றவை).