பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 1 O5

ஒரு நாளைக்கு இதயம் சுருங்குவது 100,000 தடவைகள்.

ஒரு ஆண்டுக்கு சுருங்குவது - 36 மில்லியன் தடவைகள்.

70 ஆண்டுகள் இருந்தால், அது சுருங்குவது 2,500,000,000 தடவைகள்.

அதாவது ஒரு நாளைக்கு 2000 கேலன் இரத்தம் இதயத்திற்குள் புகுந்து போகிறது என்பதாகவும் கணக்கிட்டுக் கூறுகின்றார்கள்.

உடற்பயிற்சியின் உபயோகம்

தொடர்ந்து உடற்பயிற்சிகள் செய்து வருகிறபோது, அதன் விளைவுகள், இதயத்தில் நிறைய மாற்றங்களையும் ஏற்றங்களையும் ஏற்படுத்துகின்றன.

மற்ற தசைகளைப் போலவே, இதயமும் விரிவடை கின்றது. வலிமை பெறுகின்றது. குறிப்பாக, வென்டிரிக் கிள்கள் அதிக வலிமையை அடைகின்றன.

ஆகவே, இரத்தம் இறைக்கும் பணியில் ஒவ்வொரு முறையும் இதயம் குறைவாக சுருங்கி, அதிகமாக இரத்தத்தை இறைத்து விடுகிறது. உடற் பயிற்சியால், இதயத்தின் வலிமையால் இரத்த அழுத்தம் அதிகமாகி, விரைவாக அனுப்பவே, அங்கு ஏற்படும் நாடித் துடிப்பின் நிலை எண்ணிக்கையில் குறைகிறது.

அதாவது 110 முறை நாடித்துடிப்பு என்றால், 70 ஆகவும், நிமிடத்திற்கு 60 என்கிற போது 50 என்றும் ஏற்பட்டு விடுகிறது. -

ஆகவே, இதயத்தின் எடுப்பான வேலைக்கும், மிடுக்கான ஆற்றலுக்கும், நிறைவான செயலுக்கும், உடற் பயிற்சிகள் நலமான துணையாக, ) Y தூண்டல்களாக இருந்து உதவுகின்றன.