பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 O8. டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

சுவாச மண்டலம்

சுவாசம் என்றால் என்ன?

உயிர் வாழ்கின்ற எல்லா உயிரினங்களுமே சுவாசிக் கின்றன. உயிரினத்தின் ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வொரு

பணியை மேற்கொண்டிருந்தாலும், சுவாசிக்கின்ற பணியே மிக முக்கியமான முதன்மையான பணியாக விளங்குகின்றது.

பிறப்பு தொடங்கி இறப்பு வரைக்கும், இந்த சுவாச வேலை தொடர்ந்து நடந்து கொண்டு தான் வருகிறது. சுவாசம் இல்லாமல் எந்த உயிரும் இயங்க முடியாது. எப்பொழுது சுவாசம் நின்று விடுகிறதோ, அப்பொழுதே அதற்கு உடல் என்ற பெயர் போய்விடுகிறது. -

எனவே, உயிரினத்திற்கும் சுற்றுப்புற சூழ்நிலைக்கும் இடையே, சதா காலமும் காற்றுப் பரிமாற்றம் என்ற ஒன்று நடைபெற்றுக் கொண்டேயிருக்கிறது.

ஆமாம், நாம் உயிர் வாழ்வதற்கு காற்று மிகவும் கட்டாயமாகத் தேவைப் படுகிறது. காற்றில் உள்ள ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு உறுப்புக்களுக்குத் தருவதும், உறுப்புக்கள் உண்டாக்குகிற கரியமில வாயுவை வெளியே அனுப்பி வைத்து விடவும் கூடிய வேலையைத்தான் சுவாசம் (Respiration) argrGpmb.

இப்படி உள்ளிழுத்துக் காற்றை வெளியே விடுகிற வேலையை, இருவகையாகப் பிரித்துக் காட்டுவார்கள்.

/. 2 off &Guazo (Internal Respiration)

தேகத்தில் உள்ள எல்லா திசுக்களும், இரத்தத்திலிருந்து ஆக்சிஜன் எனும் உயிர்க்காற்றைப் (பிராணவாயு) பெற்றுக் கொண்டு, கழிவாகப் போன கார்பன்டை ஆக்சைடை