பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

(ஆ) அமிலேஸ் (Amylase): இது கார்போஹைடி ரேட்டினை (மாவுப் பொருள்) குளுக்கோஸாக மாற்றுகிறது. மானோசாக்கரைடுகளாகப் பிரிக்கின்றது.

(இ) லைப் பேஸி (Lipase): இது கொழுப்புப் பொருட்களைக் கிளிசரினாகவும் (Glyserin); கொழுப்பு அமிலமாகவும் மாற்றுகிறது. - -

குறிப்பு: கணைய நீர் தினமும் 800 மி. லிட்டர் அளவு சுரக்கிறது. உணவின் தன்மையைப் பொறுத்தும், அளவு, அமைப்பு இவற்றைப் பொறுத்தும், சுரக்கும் அளவு மாறுபடுகின்றது. உதாரணமாக, பாலைவிட, ரொட்டிக்காக அதிக அளவு கணைய நீர் சுரக்கிறது.

2. e5 & 66 (Intestinal Juice)

தினமும் 1 லிட்டர் அளவு, குடல் நீர் சுரக்கிறது.

இதில் ரெட்சின், அமிலேஸ், லேக்டேஸ், லைபேஸ் ஆகிய முக்கிய என்சைம்கள் இருக்கின்றன.

ரெட்சின் புரோட்டினையும்; அமிலேஸ் கார்போஹைடி ரேட்டையும்; லேக்டேஸ் கொழுப்புப் பொருளையும் க்ரைக்க உதவுகின்றன.

கணைய நீரைப் போன்றே குடல் நீரும் ஜீரணத்தின் போதுதான் சுரக்கிறது.

3. Cog of (Bile Juice)

ஒரு நாளைக்கு 700 - 1200 மி.லி பித்த நீர் சுரக்கிறது.

கல்லீரலில் பித்த நீர் சுரப்பு இடைவிடாது நடை பெறுகிறது. பித்த நீரானது, பலவீனமான கார நிலையை யிடையது.