பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19e டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

இதுவும் மூன்று பிரிவுகளை உடையது. சிறு மூளையின் மேற் பரப்பில், பல மேடு பள்ளங்கள் இருக்கின்றன. மூளையின் மற்ற பகுதிகளுடன், நரம் பு இழைகள் மூலம் சிறு மூளை தொடர்பு கொண்டுள்ளது.

பெரு மூளையைப் போலவே, சிறு மூளையின் உட்பகுதி வெண்மையாகவும், வெளிப்பகுதி சாம்பல் நிறமாகவும் இருக்கிறது.

சிறு மூளையின் பணிகள்

1. உடல் உறுப்புக்களும், தசைகளும், அசைந்து இயங்குகிற ஒருங்கிணைப்பு (Coordination), அவற்றின் தெளிவான தனிப்பண்பு: அவற்றின் எளிதான இலகுவான இயக்கம் ஆகியவற்றிற்கு சிறு மூளை பொறுப்பாகும். அதாவது உடல் தசைகள் இணைந்து தடுமாற்றமில்லாமல் வேலை செய்ய இது கட்டுப்படுத்துகிறது.

2. தசைகளின் விறைப்புத் தன்மையை இது கட்டுப் படுத்துகிறது.

3. தேகம் இயங்குகிற சமநிலையைப் (Balance) பாதுகாக்கிறது. -

4. ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும் என்று நினைக் கிறோம். அதற்காக, பல்வேறுபட்ட உறுப்புக்கள் பல்வேறுபட்ட தசைகள் சேர்ந்தே செய்கின்றன. இதற்கான உத்திரவை சிறுமூளை கொடுக்கின்றது.

5. மது குடிப்பவர்கள், தடுமாறித் தள்ளாடி நடப்பதன் காரணம். அந்த மதுவின் போதைத் தன்மையானது, சிறு மூளையைத் தாக்கி விடுவதுத்ான், சிறுமூளை பாதிக்கப் படுகிற போது, தசைகளின் இயக்கக் கட்டுப்பாடு சீர்குலைந்து போகிறது.