பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O2 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

- தசைகளில் ஒரு சூடான பொருள் படும் போது, அந்த உணர்ச்சியை, உணர்ச்சி நரம்பு தண்டுவடத்திற்கு எடுத்துச் செல்கிறது.

உடனே, அத்துடன் இணைந்திருக்கும் செய்கை நரம்பானது ஒரு தசையைத் தூண்டி, இயங்கும் படி செய்துவிடுகிறது. தண்டுவடத்தில் ஏற்பட்டுள்ள குறுக்கு இணைப்புக்களினால், மேலும் கீழும் இயங்கி, பல்வேறு தசைப் பகுதிகளையும் தூண்டி விடுகிறது. இதனால், பாதிக்கப்படுகிற உறுப்பு, பாதிப்பிலிருந்து வெளியேறுகிறது.

இதையே அனிச்சைச் செயல் என்கிறோம்.

அனிச்சைச்செயல் முடிந்த பிறகு, என்னகாரியம் நடந்தது என்பதை மட்டும், மூளை தெரிந்து கொள்கிறது.

இறுதியாக ஒன்று. தண்டு வடத்தின் பணிகள், மூளையால் கட்டுப்படுத்தப்படுகின்றன என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். .

சோர்வும் துக்கமும்

மூளைக்கு அதிகமாக வேலை தருகிற போது, மூளையும் அதனைச் சார்ந்த நரம்பு மண்டலமும் களைத்துப் போகின்றன.

அதற்குக் காரணமும் உண்டு.

நரம்பு மண்டலம் செயல்படுகிறபோது. அதனால் ஏற்படுகிற கழிவுப் பொருட்கள், அங்கு அகற்றப்படாமல் போவதே காரணம். இந்தக் கழிவுகள் அதிக நேரம் தங்குவதால், நரம்புகளில் சோர்வு ஏற்பட்டு விடுகிறது. இந்தச் சோர்வே, மிகுதியான களைப்பை உண்டாக்கி விடுகிறது.