பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

அங்கே, இயற்கையான மிகுதியான சுவாசம், தடைபட்டுப் போகிறது. -

- சுவாசத்தில் ஏற்படும் விரைவு இன்மையால், இரத்த ஒட்டத்தின் வேகம் குறைகிறது. உடல் செல்களுக்கு இரத்தம் போவது குறைகிறது.

கழிவுப் பொருட்கள் வெளியேறும் வேகம் குறைவதால், அங்கே அசதியும், களைப்பும் தளர்ச்சியும் அதிகமாகின்றன.

வளைந்த குனிந்த உடல் அமைப்பும் புவிஈர்ப்புத் தானத்தை மாற்றி விடுகிறது. அதனால் நடையில், நிற்பதில் தள்ளாட்டம் உண்டாகிறது.

உடலை வளைத்து நிற்பதால் நரம்பு மண்டலமும் பாதிக்கப்படுகிறது.

இப்படிப்பட்டவர்கள் விளையாட்டில் பங்கு பெற இயலாமல் தவிக்கிறார்கள் - தத்தளித்துப் போகின்றார்கள். விளையாட்டில் கிடைக்கும் சுகமான இன்பம், அவர்களுக்குக் கானல் நீராகிப் போகிறது. நாய்க்குக் கிடைத்த தேங்காய் போல அவர்களின் வாழ்க்கை அவலமாகிப் போகின்றது.

ஆகவே, தோரணை கெட்டவர்கள் தனிப்பட்ட முறையில் பல கஷடங்களுக்கு ஆளாவதுடன், சமூக நிலையிலும் பின் தங்கிப் போய் விடுகின்றார்கள்.

என்வே, நல்ல தோரணையைக் கற்போம், நிமிர்ந்த தோரணையில் நிற்போம், நிறைய சுகங்களை அனுபவிப் போம் என்ற உறுதியுடன் வாழ்வோம்.

விலா எலும்புகள் (RIBs)

மார்புக் கூட்டில் தான், விலா எலும்புகள் எழிலாக இணைந்திருக்கின்றன.