பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை பாரத மணித்திரு நாடு வந்தவர்க்கு வாழ்விடமாய் அமைந்த காலத்தில் அதை மண்ணின் மைந்தர்க்கு உரிய பூமியாய்மாற்றி அமைக்கப் போராடிய போராட்டமே இந்திய சுதந்திரப் போராட்டம் ஆகும். இப்போராட்ட வேள்வியில் தம்மையே ஈந்ததியாக சீலர்கள் ஏராளம் ஏராளம்! அத்தகையோருள் நம் நெஞ்சில் நிலைக் கத்தக்க பெரியயோர்கள்தாதாபாய்நெளரோஜி, பாலகங்காதரதிலகர், கோபால கிருஷ்ண கோகலே, மகாத்மா காந்தி, பண்டித நேரு, மூதறிஞர் ராஜாஜி, செக்கிழுத்த செம்மல் வ.உ.சி போன்றோர் ஆவர். இவர்கள் வரிசையிலே வைத்து எண்ணத்தக்கவர் பெருந்தலைவர் காமராஜ் ஆவார். மேலே குறிப்பிட்ட தியாக சீலர்கள் எல்லாம் கல்லூரிக் கல்வி கண்டவர்கள். நம் தலைவரோ பாரதத்தையே

கண்டு கற்றவர். மகாத்மா காந்தியடிகள் அரசுச் சார்புடைய திவான் குடும்பத்தைச்சார்ந்தவர். நம்தலைவரோபாமரக்குடும்பத்தில் பிறந்த ஏழை பங்காளர். நேரு பெருமகனார் சட்டம் பயின்ற பண்டித குடும்பத்தைச் சார்ந்தவர். நம் தலைவரோ படிக்காத மேதை. பாரதம் போற்றும் முனைவர். திருமணம் செய்து அவ்வாழ்வை உதறிய ஆன்மீக வள்ளாரைப் போல நம் தலைவர் திருமணமே நாடாமல் நாட்டுக்கு உழைத்த அரசியல் வள்ளலார் ஆவார்.

தென்புலத்தில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களுள் தலைமணியாய்த் திகழ்பவர் பெருந்தலைவர் காமராஜ். தன் இணையற்ற தொண்டாலும், தியாகத்தாலும் பாரத மக்களின் இதயத்தில் இடம் பிடித்த முதல்வர் காமராஜ் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகும். சத்தியத்துக்கு இலக்கணம் மகாத்மாவின் சுயசரிதை என்றால் தொண்டுக்கு இலக்கணமாய் அமைவது பெருந்தலைவர் காமராஜின் வாழ்க்கை விளக்கமாம் இந்நூல். காமராஜரின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் மட்டுமல்ல, சிறந்த புத்தகமும் ஆகும். இன்று அரசியலைச் சொந்த வாழ்வுக்கும் குடும்ப முன்னேற்றத்துக்கும் பயன்படுத்துவதையே கொள்ளையாய்க் கொண்டு வாழ்ந்து வரும் தமிழகத் தலைவர்கள் படித்துப் போற்றி, பின்பற்ற வேண்டிய சட்டப்புத்தகம், வேத நூல், இலக்கணம், இவ்வாழ்க்கை வரலாற்று ខ្លា. வருங்கால பாரத நாட்டை வளப்படுத்த இருக்கும் இளஞ்சிற்பிகளுக்கு வழிகாட்டியாக விளங்கும் காமராஜர் வாழ்க்கை வரலாற்று நூலை வெளியிடுவதில் பெருமிதம் கொள்ளுகிறோம். பேருவகை எய்துகிறோம். தக்கவாறு பயன்படுத்திக் கொள்ளுவது தகுதி மிக்கவர் கடமையாகும். - சாந்தி பதிப்பகத்தார்.