பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 91 சேக்கிழார் ஈடுபடுவதைக்காட்டிலும் சுந்தரர் திருத்தொண்டத் தொகை பாடியதில் அதிகம் ஈடுபடுகிறார். அதனாலன்றோ, கேசம் கிறைந்த உள்ளத்தால் லேம் கிறைந்த மணிகண்டத்(து) ஈசன் அடியார் பெருமையினை எல்லா உயிரும் தொழாடுத்துத் தேசம் உய்யத் திருத்தொண்டத் தொகைமுன் பணித்த திருவாளன் வாச மலர் கழல்வனங்க வந்த பிறப்பை வணங்குவாம்." (பெ.பு.-சண்டேசுவரர், 60) என்று அவர் மகிழ்ந்து கூறுகிறார். இராமகாதை பாட வந்த கம்பநாடன் நாட்டுச் சிறப்பினைக் கூற எடுத்துக் கொண்டு மருத நிலத்தை அரசனாக உருவகஞ் செய்து மகிழ்கிறான். 'தண்டலை மயில்கள் ஆடத் தாமரை விளக்கந்தாங்க...... மருதம் வீற்றிருக்கும் மாதோ’ என்ற இனிய பாடலை அறியாதார் இலர். அது தசரதன் கொலு வீற்றிருப்பதைச் சூசகமாக முன்னமே அறிவிக்கிறது. எட்டு மங்கையரை மணந்த சீவகன் சரிதங் கூறப்புகுந்த திருத்தக்கதேவர் நாட்டுவளம் கூறுகிறார். நற்றவஞ் செய்வார்க்கிடம்; தவஞ் செய்வார்க்கும் அஃதிடம் என. ஏமாங்கத நாட்டை வருணிக் கிறார் தேவர். எண் மடந்தையரை மணந்தும் சீவக்ன் இறுதியில் துறவு பூண்டு தவமியற்றப் போய்விடுகிறான் என்பதைக் குறிப்பாக இல்லற நெறி வாழ்வார்க்கும். துறவு நிலை மேற்கொள்வார்க்கும் அதுவே இடம் என்னும் பொருள்பட அவர் கூறியுள்ளார். ஆனால், சேக்கிழார் காப்பியத்தில் வருபவர்கள் இல்லறம் துறவறம் என்னும் இரண்டிலும் இருந்து இரண்டிற்கும் அப்பாற்பட்டதாய் பயனை இங்கேயே துய்த்தனர். எனவே, அதற்கு ஏற்ற முறையில் அவர் நாட்டுவளம் கூறுகிறார். -