பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 தேசிய இலக்கியம் எனினும், இப் பாடலின் மூலம் அவருடைய நாடு, மொழிப் பற்றுகளே வெளியாகும், அதனாலேயே தமிழ் நாட்டில் பிறந்து சிவபெருமானையே பரம்பொருள் என்று கருதி வழிபட்டவர்களைமட்டும் வரிசைப்படுத்திக் கூறியுள்ளார் பாடல் முழுவதும். - - நம்பியாரூரர் காலத்தில் இவ்வாறு தமிழர்களுடைய குறிக்கோள் முதலியவற்றை நினைவூட்டவேண்டிய நிலை ஏற்பட்டதுபோலும். ஒரு நாட்டு மக்கள், வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் (ideal in life) உடையவர்களாக வாழ வேண்டும் என்று அவர்கட்கு எடுத்துக் கூறவேண்டினால் அவர்கட்குத் திருக்குறளைப்போல் நேரடியாக உபதேசம் செய்வதைக் காட்டிலும் ஒரு சிறந்த வழி உண்டு. அவர்களுடைய நாட்டில் அவர்கட்கு முன்னர் வாழ்ந்தவர்களுடைய வரலாற்றை நினைவூட்டுவதே அவ்வழியாகும். நம்பியாரூரரும் அவ்வழி யைத்தான் கடைப்பிடித்துத் திருத்தொண்டத் தொகை பாடினார். இப் பாடலைப் பாடும்பொழுது நம்பியாரூரரின் கருத்து எதுவாய் இருந்திருக்கும் என்பதை நன்கு உணர்ந்த சேக் கிழார், தாம் பாடிய பெரியபுராணத்தில் இக் கருத்தை நன்கு வளர்த்துவிட்டார். தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்த இவ் வடியார்கள் அனைவரும் பல இடங்களில், பல காலங்களில் பிறந்து, பல தொழில்களில் ஈடுபட்டிருப்பினும், ஆண்டவ னிடம் அன்பு பூண்டு, அவ்வன்பில் தம் வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் வாழ்ந்தனர். இந்தப் பொதுத் தன்மையை எடுத்துக்காட்டுவதன்மூலம் தம் காலத்தில் வாழும் தமிழர்களையும் திருத்தலாம் எனச் சேக்கிழார் நம்பியதனாலேயே பெரிய புராணத்தைப் பாடி னார். எனவே, தமிழர் வாழ்வு, நாகரீகம், கலை, பண்பாடு என்பவற்றை எடுத்துக் காட்டுவதுடன் அவர்களுடைய வாழ்வின் குறிக்கோள் எது என்றும் எடுத்துக்காட்டுவதால் இந்நூலைத் தமிழர்களின் தேசிய இலக்கியம் என்று கூற லாம்.