பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந் தன் r 167 கொண்டுள்ளனர். அவருள் ஒருவரே நம்பியாரூரர். இறைவன் அருளால் குண்டையூரில் இருந்த நெல் மலை மறுநாள் காலை திருவாரூர் வந்து சேர்ந்தது. பொன் துஞ்சு மாளிகை திருக்கோளியிலுள்ள பெருமானை வணங்கிக் குண்டை யூரில் தமக்குக் கிடைத்துள்ள சில நெல்லைத் திருவாரூரில் கொணர்ந்து தருமாறு வேண்டினார் நம்பியாரூரர். அன்றிரவே நெல் திருவாரூரில் வந்து சேரும் என்று இறைவன் அருள் செய்தான், அதனை உணர்ந்த ஆரூரர் மிக்க மகிழ்ச்சியுடன் திருவாரூர் மீண்டு கோயிலுக்குச் சென்று இறைவனை வனங்கிவிட்டுத் தம் வீட்டிற்குச் சென்று இந் நற்செய்தியைப் பரவையாருக்குத் தெரிவித்துவிட்டுப் பகற்பொழுதின் வரவை எதிர்நோக்கி இருந்தார். இரவு கழிந்து பொழுதும் புலர்ந்தது. திருவாரூரில் வாழ்பவர்கட்கு அன்று காலை விடிகிறபொழுது வீட்டின் எதிரே ஓர் அதிசயம் காத்திருந்தது. முதல் நாள் இரவுப் படுக்கைக்குப் போகுமுன் அவரவர்களுடைய வீட்டைத் தாழிட்டுவிட்டுத்தான் உறங்கச் சென்றிருப்பார்கள். அவ்வாறு தாழிடும்பொழுது வீட்டின் எதிரே ஒன்றும் இல்லை. வெறும் தெருவைப் பார்த்து அக் கதவுகள் அடைத்து நின்றன. ஆனால், விடிவதற்குள் ஒரு பெரிய மாறுதல். புழுதி படிந்து நின்ற தெருக்களில் எள் விழ இடமின்றி நெல் மலை குவிந் திருக்கிறது. அவரவர் விடியற்காலம் எழுந்து தத்தம் அடைத்த இல்லங்களைத் திறந்து பார்த்தார்கள். வெறும் தெரு இருந்த இடத்தில் நெல் மலையைக் கண்டார்கள். அவரவர் கண்களையே நம்ப முடியவில்லை. மீட்டும் கண்ணைத் துடைத்துக்கொண்டு பார்த்தனர். நெற் குன்று கள் மறையவில்லை. தாம் காண்பது கணவன்று என்பதை அவரவர்முடிவு செய்துகொண்டனர். பன்முறையும் பார்த்த பின்னர் பலரும் கூடிப் பேசினர். ஒவ்வொருவருக்கும் இந்த