பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 203 "என்.பாவம் ஆறு, கடல் ஏழிருந்தும் என்அம்ம்ை அன்பாளர் கண் அருவி ஆடுவது திருவுள்ளம்" என்று அழகாகப் பாடினார். ஏழு கடல், எத்தனை ஆறுகள் உண்டோ அத்தனை ஆறுகளிலிருந்தும் தீர்த்தங்கள் கொண்டு வந்தான்: ஆட்டினான் ஆண்டவனுக்கு. ஆண்டவன் இரங்கவில்லை; ஏன்? ஆண்டவனே படைத்த அந்து ஆறுகளிலிருந்தும், அவன் படைத்த அந்தக் கிடல்களி லிருந்தும் நீரைக்கொண்டு வந்து அவனுக்கு வழிபாடு செய்வ திலே அவன் மகிழ்ச்சி அடையவில்லை. அப்படியானால், அவன் எதில் உண்மையான மகிழ்ச்சி அடைகிறான்? அவன் கொடுத்த விதையாகிய அன்பை இவன் நல்ல முறையிலே பயன்படுத்தினானான் என்பதற்கு அடையாளம் பக்தனின் கண்ணில் வரும் கண்ணிராகும் ஆர்வலர் புன்கணிர் பூசல் தரும் என்று சொல்லுகிறாரே வள்ளுவர், அந்தப் புன்கணிர் தான். அன்புக்கு அடைக்கும் தாழ் இல்லை; ஆகவே, சொட்டுக் கண்ணிராகவே அந்த அன்பு வெளிப்படுகிறது அந்தச் சொட்டுக் கண்ணிரைக் கண்டவுடேனே ஆண்டவன், இத்தனைக் குடங்குடமான தீர்த்தங்களிலேயும் மகிழ்ச்சி அடையாத அந்த ஆண்டவன். இந்த இரண்டு சொட்டுக் கண்ணிராகிய உப்புத் தண்ணிருக்கு இரங்கிவிடுகின்றான். இதில் மற்றும் ஒரு பொருள் சிறப்பும் உண்டு. உண்மையாக ஒருவர் கொடுத்ததை நல்ல முறையில் வைத்துக் கொண்டு வாழ்ந்தால் கொடுத்தவருக்கு மகிழ்ச்சிதானே ஏற்படும். தானே கொடுத்த பொருளைத் திருப்பித் தன்னிடத்திலே கொண்டு வந்து தருவதைக் காட்டிலும், தான் கொடுத்த மூலதனத்தை வைத்துக்கொண்டு மைந்தன் பெருக்கினான் என்றால், பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுவது இயற்கை தானே! அதே முறையிலே அன்பாகிய சின்ன விதையைக் கொடுத்தோமே, அந்த அன்பு என்ற விதையை இவன் வளர்த்துப் பெருக்கிப் பிறர் நலம் என்ற மரமாக ஆக்கினானா?